இலங்கை முக்கிய இடங்கள் – 4

0
719

23. மாவிட்டபுரம் கந்தசாமி கோயில்
குதிரை முகம் அமையப்பெற்ற மாருதப்புரவீக வல்லியின் குதிரை முகம் நீங்கப்பெற்றமையால் மாவிட்டபுரம் என்னும் பெயர் வரக்காரணம். ஈழத்து ஐந்து தேர் திருவீதியுலா வரும் ஆலயங்களில் ஒன்றாக சிறப்புப் பெற்றது. கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உக்கிர சோழ மன்னன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வீதியுடாக தெல்லிபழைச் சந்திவழியாக மாவிட்டபுரம் சென்றடையலாம்.

24. ஸ்ரீ நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரர் சுவாமி கோயில்
மூர்த்தி, தலம் தீர்த்தம் ஆகிய மூவகைச் சிறப்பும் அமையப்பெற்றது கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம். திருத்தம்பலேசுவரர் என்பவர் இத்தீத்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு கீரிமுகம் நீங்கப்பெற்றதால் கீரிமலை எனப் பெயர் வந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன் துறை வீதியுடாக மாவிட்டபுரத்தினை அடைந்து அங்கிருந்து மேற்கு நோக்கி 3 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

25. கீரிமலைக்கேணி
இது ஆரம்பகாலத்தில் கண்டகி தீர்த்தம் என அழைக்கப்பட்டது. கீரிமலைத் தீர்த்தம் நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்தமாகக் சிறப்புப் பெறுகின்றது. ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் நீராடும் கேணி காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன் துறை வீதியுடாக மாவிட்டபுரத்தினை அடைந்து அங்கிருந்து மேற்கு நோக்கி 3 ½ கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

26. நல்லூர் கந்தசுவாமி கோயில்
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்துக் கோயில்களில் ஒன்று நல்லூர் கந்தசுவாமி கோயில். இது தனக்கென ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இங்கே 25 நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது.
நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ள மற்றைய இடங்களாக மந்திரிதனை, சங்கிலியன் தோரணவாசல், சங்கிலியன் தோப்பு, சங்கிலியன் சிலை, சென் ஜேம்ஸ் தேவலாயம், கில்னர் மண்டபம் ஆகியவற்றைப் பார்வையிடலாம்.

27. யாழ்ப்பாணப் பல்லைக்கழகம்
1974 ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகமாக உருவாக்கப்பட்டது. இது சேர். பொன் இராமநாதன் வீதியில் திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தில் உள்ளது.

28. காரைநகர்
கசூரினா கடற்கரை
யாழின் அழகிய கடற்கரையாக கசூரினா கடற்கரை காணப்படுகின்றது. கசூரினா மரங்கள் நிறைந்த கடற்கரை உள்நாட்டவர்களையும் வெளிநாட்டவரகளையும் கவர்ந்த சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது.

காரைநகர் சிவன் கோயில்
ஈழத்துச்சிதம்பரம் எனப் போற்றப்படும் காரைநகர் திண்ணபுரச சிவன் கோவில் இந்தியாவில் உள்ள சிதம்பரக் கோவிலில் நடைபெறும்;;; கிரிகைகள், மரபுகளைப் பின்பற்றி வருவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

கோவளம் வெளிச்ச வீடு
1916 ஆம் ஆண்டு ஆங்கிலோயர் ஆட்சிக் காலத்தில் 33 மீற்றர் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது கோவளம் வெளிச்சிவீடு 100 வருடங்கள் பழமை வாய்ந்தது. முருகைக் கல்லினால் உருவாக்கப்பட்டது.

29. நெடுந்தீவு
யாழ்ப்பாணத்தை அண்டியுள்ள தீவுகளுள் ஒன்றான நெடுந்தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து தரைவழிப்பயணம் செய்து பின்னர் கடல்வழிப் பிரயாணம் மூலம் சென்றடையலாம். இங்கே புறாக்கோபுரம், இராட்சத காற்பாதம், வளரும் கல், பெருக்குமரம், கட்டை குதிரைகள், நெடுந்நீவுக் கோட்டை மற்றும் பவளப்பாறை மதில்கள் என்பவற்றை பார்க்ககூடியதாக இருக்கும்.

30. நயினாதீவு
தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து தரைவழிப்பயணம் செய்து பின்னர் கடல்வழிப் பிரயாணம் செய்வதன் மூலம் சென்றடையலாம். இங்கே ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம், ரஜ மகா விகாரையும் பார்க்க முடியும்.

31. மன்னார்
இலங்கையின் வடமாகாணத்தல் உள்ள ஒரு நகரம் மன்னார். இங்கே உள்ள சுற்றுலாத்தலம் எனப் பார்க்கும் போது ஈழத்து சிவலாயங்களில் தேவாரம் பாடப்பட்ட தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் ஆலயம், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடு மரியாள் ஆலயம், தலைமன்னாரில் உள்ள கலங்கரை விளக்கு, குஞ்சுக்குளம் தொங்கு பாலம் என்பவற்றை காணலாம்.

32. கிளிநொச்சி
இவ்வூர் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளார்கள். சிறுபோகம், பெரும்போகம் என இரண்டு முறை நெற்செய்கை இடம்பெறுவதால் இங்கே குளங்கள் அதிகம் காணப்படுகின்றது. வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேகமான இரமணைமடு நீர்த்தேக்கம் இங்கே உள்ளது. இது 1921 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

33. முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கிழக்கு பக்கமாக அமைந்துள்ள ஒட்டுசுட்டான் என்னும் இடத்தில் ஒட்டுசுட்டான் தான் தோன்றீஸ்வரம் கோவில் அமைந்துள்ளது. மூலமூர்த்தியானது யாராலும் உருவாக்கப்படாமல் தானே தோன்றியது என்பது வரலாறு. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலும் வரலாற்றுச் சிறப்பு பெற்ற கோவில் ஆகும்.

34. திருகோணமலை
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது திருகோணமலை. இது இயற்கையான துறைமுகத்தினைக் கொண்டுள்ளது. திருகோணமலையில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தளத்தினை பார்ப்போம்.
திருகோணமலைக் கோட்டை
இது போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது. இந்த கோட்டையினுள்ளேயே ஈழத்து புகழ்பூத்த திருக்கோணச்சர ஆலயம் அமைந்துள்ளது.
திருகோணோச்சரம்
ஈழத்து பாடல் பெற்ற தலங்களில் ஒன்றானது இவ்வாலயம் மலையின் உச்சியில்; அமைந்துள்ளது. கோயிலுக்கு அண்மையில் இராவணன் வெட்டும்; காணப்படுகின்றது.
வெந்நீரூற்று
திருகோணமலையில் கன்னியா என்னும் இடத்தில் இயற்கையாக ஏழு வெந்நீரூற்றுக் கிணறுகள் அமைந்துள்ளது. ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் வெற்வேறு வெப்பநிலையில் நீர் ஊறி வந்து கொண்டிருக்கும். வெந்நீருற்றுக்கு அருகில் உள்ள மலையில் இராவணனின் தாய் கல்லறை அமைந்துள்ளது. அது 60 அடி நீளமானது.
நிலாவெளி கடற்கரை
சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்த ஒரு கடற்கரை இங்கே சூரியல்குளியல், படகுப் பயணம், நீச்சல் ஆகியவற்றுக்கு சிறப்பு இடமாகும்.
கடல் மேல் பாலம்
இலங்கையிலேயே மிகவும் நீளமான கடல் மேல் பாலம் திருகோணமலையில் உள்ள கிண்ணியாவில் உள்ளது.
இவற்றைவிட திருகோணமலை பத்திகாளி அம்மாள் ஆலயம், லஷ்சுமி நாராயணனர் கோவில், கந்தளாக்குளம், தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோவில், இலங்கையிலுள்ள ஒரேயொரு சனீஸ்வரக்கோவில் என பல சிறப்புக்களை கொண்ட திருகோணமலை அமைகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here