இலங்கை முக்கிய இடங்கள் – பாகம் 3

0
632

16.    புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயம்
மிகவும் பழைமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். வெற்றிலைக்கேணி என்னும் பிரதேசத்தில் அமைந்துள்ளது, திருவிழாக் காலங்களில் மட்டும் தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

17.    மணற்காடு புனித அந்தோனியர் ஆலயம்
1894 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆலயம் இருந்த இடம் தெரியாமல் மணற்புயல் காரணமாக மணலால் முற்றாக மூடப்பட்டுள்ளது. பின் தற்போதைய ஆலயம் 1925 ஆம் ஆண்டு வேறு ஒரு இடத்தில் அமைக்கப்பட்டது. இவ்வாலயம் மணற்காடு என்னும் பிரதேசத்தில் அமைந்துள்ளது,
பருத்துறையில் அருந்து 12 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

18.    சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம்
ஏரிகளால் சூழப்பட்ட இயற்கையானது இச் சரணாலயம். உள்ளுர், வெளியூர் பறவைகள் நவம்பர் மாதம் தொடக்கம் தை மாதம் வரை வருவதால் வித்தியாசமான பறவைகளைப் பார்க்க முடியும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரத்தில் 49.2 சதுர கிலோமீற்றருக்கு மேலான பரப்பளவைக் கொண்டது.

19.    நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்.
ஐந்து தலை நாகத்தினை மூலவராகக் கொண்ட அமைந்துள்ளது இவ்வாலயம். ஆதியில் இங்கு வாழ்ந்த நாகர் இனத்தவர்கள் நாக வணக்கத்தை உடையவர்களாகவும் தனது அரசனை தம்பிரான் என்று அழைக்கும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக நாகதம்பிரான் என்ற பெயரைச் சூட்டி வழிபட்டனர். திருவிழாக்காலங்களில் நடைபெறும் கப்பல்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். வடமராட்சி கிழக்கு மருதங்கோணி சந்தியில் இருந்து 18 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.

20.    இணுவில் செகராசசேகரப் பிள்ளையார் கோவில்
பண்டைய மன்னர்களால் அமைக்கப்பட்ட முதுபெரும் ஆலயங்களில் இதுவும் ஒன்று செகராசசேகரளால் கட்டப்பட்டதால் இப்பெயர் வரக்காரணமாகும்.  மருதனார் மடத்திலிருந்து தெற்கு பக்கமாக காங்கேசன்துறை வீதியினூக 1 கிலோமீற்றர் தூரத்தில் இ ணுவில் பாப்பாத்தோட்டம் வீதியினூடாக 250 மீற்றர் மேற்கு திசை நோக்கிச் சென்றால் இவ்வாலயம் கண்ணுக்குப் புலப்படும்.
விலாசம் : பாப்பாத்தோட்ட வீதி, இணுவில் மேற்கு, இணுவில்.

21.    இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவில்
500 ஆண்கள் பழைமை வாய்ந்தது இக்கோயில். பரராஜசேகர மன்னனால் உருவாக்கப்பட்டது. காங்சேகன் துறையில் வீதியின் இணுவில் சந்தியில் நின்று 500 மீற்றர் சென்றால் மேற்குத்திசையில் அமைந்துள்ளது.

22.    உடுவில் மகளிர் கல்லூரி
ஆசியாவிலே முதன் முதலில் பெண்கள் விடுதியுடன் உருவாக்கப்பட்ட பாடசாலை உடுவில் மகளிர் கல்லூரி ஆகும். 1824 ஆம் ஆண்டு கரியட் வின்சிலோ அம்மையாரால் உருவாக்கப்பட்டது. இங்கே உள்ள பெண்கள் கல்வி கற்பத்தில்லை என்பதை அறிந்து அங்கு உள்ள பெண்களுக்கு கல்வியின் அவசியம் பற்றி விளக்கி கல்லூரியை அமைத்தார்.
மருதனார் சந்தியிலிருந்து மேற்குப் பக்கமாக கைதடி மானிப்பாய் வீதியினூடாக 250 மீற்றர் தொலைவில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here