ஏப்ரல் 2 : பார்வை 2017 – முன்னோட்டம்

0
615

தாம் சண்முகம் : 

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் “பார்வை 2017” இந்தாண்டு தமிழ்மொழி விழாவின் மூன்றாவது நிகழ்ச்சி. வரும் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2ம் தேதி காலை மணி 11 முதல் மதியம் மணி 1:30 வரை உட்லான்ட்ஸ் நூலக அரங்கில் நடைபெறுகிறது. ஐந்தாவது முறையாக “பார்வை” நிகழ்ச்சியை அரங்கேற்றும் இவர்கள் தமிழ் மொழி விழாவுக்கு புதிய வரவு. 
கடந்தாண்டு சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட ‘பார்வை’ நிகழ்ச்சி. இந்தாண்டு “செங்குழல் சீவிய பத்தினித் தீ”(தலைப்பே கவித்துவமா இருக்கு, ஆர்வத்தை தூண்டுகிறது) எனும் தலைப்பில், பாஞ்சாலி சபதத்தை மையப்படுத்தி நடைப்பெற இருக்கிறது. இதுவும் முற்றிலும் மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சி. இலக்கியத்தை தொழில்நுட்ப உதவியுடன் புதிய கண்ணோட்டத்தில் மாணவர்களிடம் கொண்டு சொல்லும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது

மூன்று முக்கிய அங்கங்களுடன் அரங்கேற இருக்கும் இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக காணொளி போட்டி நடைபெறுகிறது. நீ ஆன் பலதுறை தொழில்நுட்பக் கல்லூரி, தெமசக் தொடக்கக் கல்லூரி, தேம்பனீஸ் தொடக்கக் கல்லூரி என மூன்று குழுக்கள் ‘பத்தினித் தீ பாஞ்சாலி’, தர்மத் தலைவன்’, ‘சகுனியின சூழ்ச்சி’ என்கின்ற தலைப்பில் 3 நிமிடம் காணொளியை திரையிடுகிறார்கள். சிறந்த படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் கொடுக்கிறார்கள். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா ஆண்டியப்பன் ஐயாவின் நாடக ஆக்கமான ‘பாரதியின் பாஞ்சாலி சபதம்’ புத்தகத்தை அடிப்படையாக கொண்டு அந்த காணொளி தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். 

அடுத்து ஒரு பட்டிமன்றம். “வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த வழி, தர்மமே!, சூழ்ச்சியே!” என்ற தலைப்பில் நடைபெறுகிறது. ‘தர்மமே’ என்ற அணியில் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் அருள் ஓஸ்வின், ஹஃபிஸா மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவி ஐஸ்வர்யா தேவி பேசுகிறார்கள். ‘சூழ்ச்சியே’ என்ற அணியில் திரு மன்னனை அய்யா(இது ஏதோ சூழ்ச்சி தான்:)) , திரு சேவகன், திருமதி கிருத்திகா பேசுகிறார்கள். 45 நிமிடம் நடைபெறும் இந்த பட்டிமன்றத்தின் நடுவர் திரு ரெ சோமசுந்தரம் ஐயா.

முக்கிய அங்கமாக பார்வையாளர் பங்கு பெறும் போட்டியும் உள்ளது. பாஞ்சாலி சபதத்திலிருந்து 12 கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் ஓடும். அதற்கான விடையை நாம் நம் கைப்பேசியின் மூலமாக இணையத்தில் இணைந்து சமர்பிக்க வேண்டும். 20 நிமிடம் நடைபெறும் இந்நிகழ்ச்சி தொழில்நுட்பத்தின் உதவியால் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர் பார்ககலாம். பார்வையாளர்கள் நல்ல தயார் செய்துவிட்டு வர வேண்டும்.

இன்னொரு சிறப்பு அங்கம் ஒன்று உண்டு. அது என்னவென்று அங்கே வந்து பார்க்கவும். 

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வளர்த்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு இராஜராம் பங்கேற்கிறார். 

நிகழ்ச்சி முடிந்தவுடன் எளிய சிற்றுண்டி வழங்கப்படும். அதனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் வெள்ளிக்கிழமைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘கூகிள் ஃபார்ம்ஸ்’ சுட்டியை சொடுக்கி முன் பதிவு செய்யவும். முடியாதவர்கள் சீக்கிரமாக அரங்கத்திற்கு வந்து பதிவு செய்யவும். அப்பத்தான் அவர்கள் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.

#தமிழ்மொழி_விழா_2017

#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்

#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

https://goo.gl/forms/tRx2oAzKaL2mo97q2

பாண்டவர் தம் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி, முன்னிழுத்து சென்றான்! 5 more days to PAARVAI 2017!! Our teams are all set to bring you a literary celebration like none other!Do register at the link with your family and friends to grab your seats NOW!#Paarvai2017 #TLF2017 Videography & Editing: @theoriginalrishihttps://docs.google.com/forms/d/1-mYk5Vz5nGcdqC2gF0IZDwVJz7g4acYlOgDnWNW7FDY/edit?usp=drive_web

Posted by NTU Tamil Literary Society on Monday, March 27, 2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here