கட்டோங் பழமை இல்லம்

0
630

சிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது இந்த கட்டோங் பழமை இல்லம். பெரனகன் இன மக்களின் பாரம்பரியத்தை விளக்கும் மற்றுமொரு நினைவுச் சின்னமாகவும் அவர்களின் பழமை வாய்ந்த பொருட்கள், ஆடை ஆபரணங்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமாகவும் இந்த கட்டோங் பழமை இல்லம் விளங்குகிறது.

1970-ஆம் ஆண்டு தனது தாத்தாவிடம் இருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட இந்த இல்லத்தை பீட்டர் வீ, தனக்கு பிடித்த பெரனகன் மக்கள் பயன்படுத்திய நாற்காலிகள், பண்பாட்டு பொருட்கள் என சேகரித்து வைக்கும் இடமாக பயன்படுத்தி வந்தார். அவரது கலை பொருட்களின் தேடல் அதிகரிக்கவே இரண்டு தளங்களைக் கொண்ட இந்த இல்லம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்களி பார்வைக்காக அருங்காட்சியகமாக திறக்கப்பட்டது.

இந்த இல்லத்திற்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாழும் உலகை மறந்து பல நூறு ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் செல்வது போன்ற உணர்வை இந்த இல்லம் அவர்களுக்கு வழங்கும். ‘பாபாஸ்’ மற்றும் ‘பிபிக்ஸ்’-ஐ நினைவு படுத்தும்(பெரனக ஆண்கள் மற்றும் பெண்கள்). ஆண்கள் அணிந்த சிறிய சட்டை ‘பட்டிக்’ மற்றும் பெண்கள் அணிந்த ‘சரோங் கெபாயா’ எனும் மேலாடைகளை இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர்.

பெரனகன் மக்களின் வரலாறு மற்றும் சுவாரஸ்ய கதைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், தயங்காமல் இங்குள்ள நான்காம் தலைமுறை பெரனகன் பாபாவிடம் கேட்கலாம். தற்போது பெரனகன் இயக்கத்தின் தலைவராகவும் உள்ள அவர், ஒரு போதும் சளிக்காது பெரனகன் மக்களி வாழ்வியல் சுவாரஸ்யங்களையும் வீட்டில் உள்ள இரு தளங்களையும் இலவசமாக சுற்றிக் காட்டியவாறே அனைத்து கதைகளையும் கூறி வருகிறார். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை இவரது பேச்சுக்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்குள்ள அனைத்து பொருட்களையும் எந்த ஒரு சலனமுமின்றி நீங்களே தொட்டுப் பார்த்து பெரனகன் மக்களின் வாழ்வாதாரத்தை உணரும் வண்ணம் இந்த அருங்காட்சியக இல்லம் அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பு. இந்த இடத்தை பார்வையிட வேன்டும் என்றும் விரும்பும் மக்கள் முன் அனுமதி பெறுவது மிகவும் முக்கியம்.

கட்டணம்: சி.$15

பார்வை நேரம்: காலை 11மணி முதல் 4.30 மணி வரை,

Address: 208 East Coast Road Singapore, Singapore 428907

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here