சன்யாட் சென் நன்யாங் நினைவு இல்லம்

0
556

சன்யாட் சென் நன்யாங் நினைவு இல்லம் அல்லது வான் கிங் யுவான் என்று அழைக்கப்படும் இந்த நினைவு இல்லம், சீனாவின் குடியரசு தந்தையாக கருதப்படும் சன்யாட் சென் நன்யாங்கின் நினைவு இல்லமாக அமைக்கப்பட்டுள்ளது. 1900 மற்றும் 1911-ஆம் ஆண்டுகளில் சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து இவர் பல மாற்றங்களை உண்டு பண்ணியதன் நினைவாக இந்த நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பலேஸ்டியர் பகுதியில் உள்ள ஜின் சாலையில் இரண்டு மாடி குடியிருப்பாக ஆங்கிலேய காலனிய ஆதிக்கத்தின் போது கட்டப்பட்ட ஒரு வீடு பின்னர் சன்யாட் சென்னின் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 3,120 சதுர மீட்டர். 1900-ஆவது ஆண்டில் வில்லாவாக வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம் 1901-ல் போயே சுவன் போவால் கட்டி முடிக்கப்பட்டது. யூனியன் டைம்ஸ் எனும் செய்தித்தாள் நிறுவனத்தை நடத்தி வந்த போயே சுவன் தனது மனைவி பின் சானுக்காக இதை கட்டினார் என்றும், இதற்கு பின் சான் இல்லம் என்ற பெயர் சூட்டப்பட்டது என்றதும் செவி வழி கதைகள் உண்டு. பின்னர் 1902-ஆம் ஆண்டு 10,800 டாலருக்கு தொழிலதிபர் லிம் ஆ சியாங்குக்கு இது விற்கப்பட்டது. அதன் பின்னர் பலரது கைகளுக்கு மாறிய இந்த வில்லா, 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி சிங்கப்பூர் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்து சன்யாட் சென் நன்யாங் தேசிய நினைவுச் சின்னமாக மாறி சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட்டது. தற்போது இங்கு 400 வகையான கலைநயப் பொருட்களும், சித்திர மொழி வேலைபாடுகளும், புகைப்படங்கள், பழைய அரிய புத்தகங்கள், ஓவியங்கள் மற்றும் புகழ் பெற்ற சிற்பங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் வந்து இதனை பார்வையிட அனைத்து வசதிகளும் சிங்கப்பூர் அரசு சார்பாக செய்து தரப்பட்டுள்ளன. சுமார் 2 மணி நேரம் இந்த இடத்தை பொதுமக்கள் சுற்றி பார்க்க முடியும்.

பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

Address: 12 Tai Gin Rd, Singapore 327874

வடக்கு தெற்கு இரயில் தளத்தில் உள்ள நோவினோ இரயில் நிலையத்தில் இருந்து எதிர்புறத்தில் உள்ள  பேருந்து நிறுத்தமான நோவினோ சர்ச் எதிர்ப்புற நிறுத்தத்தில் இருந்து பேருந்து என் 21-ல் ஏறி 3 நிறுத்தங்கள் கழித்து ழோங்க்ஷன் மால் நிறுத்தத்தில் இறங்கி 400 மீட்டர் நடக்கும் தூரத்தில் உள்ளது இந்த இடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here