சாக்யமுனி புத்தர் கோயில்(Temple of Thousand Lights)

0
445

சாக்யமுனி புத்த கயா கோயில் தாய்லாந்தைச் சேர்ந்த துறவி உத்திசாராவால் 1927-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நிறுவப்பட்டது. இதன் கட்டிடக் கலை தாய் கலாச்சாரத்தை ஒன்றியிருக்கும். மேலும், 15 மீட்டர் உயர பெரிய புத்தர் சிலையும், அதனை சுற்றி சிறு சிறு புத்தர் சிலைகளும் கோயிலை அழகுற வைத்துள்ளன. இந்த புத்த விகாரங்களுக்கு பொழிவூட்டும் வண்ணமாக 1000 வண்ண ஒளி விளக்குகள் இக் கோயிலில் உள்ளன. அதனால், இக்கோயிலை ஆயிரம் விளக்கு கோயில் என்றும் மக்கள் அழைப்பது வழக்கம். இக்கோயிலில் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலை சுமார் 300 டன் எடைக் கொண்டது. கோயிலை சுற்றியுள்ள சித்திரங்கள் சாக்யமுனி புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்த வண்ணம் இடம்பெற்றுள்ளன. வெசாக் எனும் புத்த பூர்ணிமா தினத்தன்று இந்த கோயிலில் திருவிழா நடைபெறும். புத்தருக்கு சிறப்பு வழிபாடும் இடம்பெறும். சாக்யமுனி புத்த கயா கோயிலில் உள்ள சிறு புத்தர் சிலையை தங்க இலைகளால் அலங்கரித்துள்ளனர். மேலும் கோயிலுக்கு வண்ண ஒளியூட்டும் விளக்குகள், மாலை பொழுதில் இரவின் மடியில் தானாக ஒளிரும் தன்மையைக் கொண்டுள்ளது தனிச் சிறப்பு. அமைதி மற்றும் மனத்தூய்மை விரும்பும் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு இந்த புத்தர் கோயில் நிச்சயம் கண்டு களிக்க வேண்டிய சுற்றுலா இடமாகும். கலை மற்றும் அழகியலை விரும்பும் மாணவர்களும் இக்கோயிலை விரும்பி வந்து காண்கின்றனர்.
Address: 366 Race Course Rd, Singapore 218638

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here