சிங்கப்பூர் இந்திய உணவகங்கள்

0
438

சைவ  உணவகங்கள் :

எம் டி ஆர் (மவல்லி டிபன் ரூம்ஸ்)
90 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இயங்கி வரும் சைவ உணவகம். தென்னிந்திய பாரம்பரிய உணவு பிரியர்கள் நிச்சயமாக இங்கு வந்து சுவையான , தரமான உணவினை ருசிக்கலாம். மேலும் இந்த உணவகம் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலின் எதிர்ப்புறம் அமைந்திருப்பதால் , ஆன்மிகத் தேடல் முடித்து , உணவுத்தேடல் தேவைக்கு இங்கு வரலாம்.
தொடர்புக்கு :Samanvay Singapore
#438, Opposite Sri Srinivasa Perumal Temple, Serangoon Road, Singapore – 218133Telephone: +65 629655800
Email : samanvay.sg@gmail.com
கோமள விலாஸ்
1947 -ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகம் சிங்கப்பூரில் அனைவராலும் அறியப்பட்ட சைவ உணவகம். அதிக உணவு வகைகள் இங்கு பிரபலம். சாம்பார் முதல் காபி வரை அணைத்து வகைகளும் இங்கு ருசித்து உண்ணலாம்
Main Branch:6-78 Serangoon Road, Singapore 217981, Tel: 6293 6980
Branches12-14 Buffalo Road, Singapore 219785. Tel: 6293 3664
Branches24-26 Race Course Road, Singapore 218548.Tel: 6341 5435
Sweets and SavouriesSweets & Savories, 82 Serangoon Road, Singapore 217987. Tel: 62943294
கோமளா,ஸ்
தரமான தென்னிந்திய சைவ உணவு வகைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது தென்னிந்திய உணவு வகைகளோடு சிங்கப்பூரின் உள்ளூர் உணவு வகைகளையும் இணைத்து புதுவித பரிமாணத்தோடு உணவு வகைகளை வழங்குகிறது. அதில் தற்போது துரித உணவு வகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் பல்வேறு கிளைகள் தீவெங்கிலும் பரந்து காணப்படுகிறது.
KOMALA’S FUSION DINING,5 & 7, Upper Dickson Road,(Little India), Singapore 207463
Komala’s Deli (Tanglin) Unit.No. R1 Tasty Food Court 1-17 Tanglin Mall, 63 Tanglin Road Singapore 247933
Komala’s North Point, #B2 – 10 – Unit – 03, North Point, 930, Yishun Avenue 2, Singapore 769098
Komala’s Restaurant (Little India) 328- 332 Serangoon Road, Singapore 218113
Komala’s (Chevron house) 30,Raffles Place, B1-06,Chevron House
Komala’s Fusion Restaurant, @ 87, Syed Alwi Road Road, Singapore 207666
Komala’s (Lau Pa Sat), 18,Raffles Quay, 34/35, Lau Pa Sat
Komala’s @ Jurong Point, Unit No. 1#B1-42/43/44, Jurong Point Shopping Centre
மதராஸ் வூட்லண்ட்ஸ் உணவகம்
ஆப்பம் , உப்புமா , பரோட்டா போன்ற உணவு வகைகளை நன்கு சுவைக்க லிட்டில் இந்தியாவின் வீரமாகாளியம்மன் கோவில் அருகிலேயே அமைந்துள்ள இந்த உணவகத்தை நாடலாம். நல்ல சேவை முதல் நல்ல உணவு வரை இங்கு எதிர்பார்க்கலாம்.
12-14 Upper Dickson Rd | Little India, Singapore
ஆனந்த பவன்
1924-ல் ஆரம்பிக்கப்பட்ட சிங்கப்பூரிலுள்ள மிகப் பழமையான சைவ உணவகங்களில் ஆனந்த பவனும் ஒன்று. பயன்படுத்தப்படாத எண்ணெய், மோனோசோடியம் குளுடோமேட் பயன்படுத்தப்படாத உணவு வகைகள், எந்த பதப்படுத்தும் பொருட்களும் சேர்க்காத சமையல் ஆகியவை இதன் சிறப்புகளாகும். இந்திய, மலாய் மற்றும் சீன உணவு வகைகள் இங்கு கிடைக்கும் .
Blk-663 # 01-10., Buffalo Road.,Singapore 210663 Tel: 62911943 Fax: 62977889 admin@anandabhavan.com
95 Syed Alwi Road., Singapore 207671 Tel: 63980837
221 Selegie Road., Singapore 188340 Tel: 63393643
58 Serangoon Road., Singapore 217964 Tel: 63965464
448 Serangoon RD, Singapore 2181388 Tel : 6299 4466
UE BizHub East., 6 Changi Businesss Park Ave1., North Tower #01-29., Singapore 486017 Tel : 6294 9595
மணி ஐயர் மெஸ்
வீட்டு சமையல் மாதிரியான பாரம்பரிய உணவு வகைகளை சுவைக்க இங்கு வரலாம். லிட்டில் இந்தியா பகுதியில் சிறிய கடையாக இருந்தாலும் , ருசியிலும், தரத்திலும் எந்த விதத்திலும் குறை இல்லாத வகையில் உணவருந்த முடியும்.
5 Hindoo Road, Singapore 209107, Tel- 6294 0930
முருகன் இட்லி கடை
தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான முருகன் இட்லி கடையின் கிளை நிறுவனமாக இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உணவகம் டிபன் வகைகளுக்கு பிரபலம். எப்போது வேண்டுமானாலும் இங்கு இட்லி உட்பட அனைத்து டிபன் வகைகளையும் ருசிக்கலாம்.
81 Syed Alwi Road,Singapore – 207660, Telephone – 62980858
சூர்யா உணவகம்
சிங்கப்பூரின் முக்கிய வழிபாட்டுத்தலமான வீரமாகாளியம்மன் கோவில் எதிர்ப்புறம் அமைந்துள்ள இந்த உணவகம் குடும்பத்துடன் உண்பதற்கு உகந்த இடமாகும். இங்கு உணவு வகைகளுடன் இனிப்பு மற்றும் நொறுக்கு தீனி வகைகளும் ருசித்து மகிழலாம்.
140 Serangoon Rd | Little India Shop Houses,Singapore – 218041, Telephone – 6296 3070
கோகுல் ரெஸ்டாரண்ட்
அசைவ உணவுகளை சைவ பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் சைவ உணவகம். பார்ப்பதற்கு அசைவ உணவுகள் போல் இருந்தாலும் சைவ பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இங்கு பிரபலம். அசைவ உணவு வகைகளின் பெயரில் வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து உணவு வகைகளும் நிச்சயம் ரசித்து ருசித்து பார்க்கவேண்டியவை . பிரபலமான வடபத்ர காளியம்மன் கோவில் அருகில் இந்த உணவகம் அமைந்துள்ளது .19 Upper Dickson,Road Singapore 207478 Tel: 6396 7769 Fax: 6396 7769
190 Fortune Centre,#01-07 Singapore 188979 Tel: 6337 4811 Fax: 6337 4811
அன்னலட்சுமி ரெஸ்டாரண்ட்
நீங்கள் விரும்பும் பணத்தை நீங்கள் உண்பதற்கு கொடுக்கலாம் என்ற கருத்தில் உருவாக்கப்பட்ட இந்த உணவகம் கலை நயமிக்க பல படைப்புகளோடு மிளிருகிறது. வயிற்றோடு சேர்ந்து கண்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் சிலைகளும் , கலைநயமிக்க ஓவியங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புபட் முறையில் இங்கு உணவு பரிமாறப்படுகிறது .
20 Havelock Road, #01-04, Central Square, 059765
Telephone – 6339 9993
அசைவ  உணவகங்கள் :

 

சிங்கப்பூர் ஜம் ஜம்
1908 -ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இந்திய-முஸ்லீம் அசைவ உணவகம் நாசி பிரியாணி, முர்தபா , ரொட்டி பரோட்டா போன்ற உணவு வகைகளுக்கு பிரபலம்.Singapore Zam Zam, 697-699 N Bridge Rd, Singapore 198675 போன்: 6298 6320
தி பனானா லீப் அப்போலோ
1974- ல் இருந்து வெற்றிகரமாக இயங்கிவரும் இந்த உணவகம் வாழை இழை கொண்டு பரிமாறும் . மீன் தலை குழம்பு மற்றும் இதர சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் எல்லாமே இங்கு பிரபலம். இந்திய உணவு வகைகளோடு உள்ளூர் உணவு வகைகளும் இங்கு கிடைக்கும்.
54 Race Course Rd,Singapore 218564
48 Serangoon Road,#01-32 Little India Arcade,Singapore 217959
ஜப்ரான் கிட்சேன்
ஐம்புலன்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உணவகம் இந்திய உணவு வகைகளோடு, உள்ளூர் உணவு வகைகளும் கலந்து விற்பனை செய்கின்றது.
East Coast: 135/137 East Coast Road, Singapore 428820 Tel: 6440 6786
Westgate : 3 Gateway Drive, #01-20, Singapore 608532. Tel +65 6465 9880
கரு’ஸ் இந்தியன் பனானா லீப் ரெஸ்டாரண்ட்
அசைவ உணவு வகைகளில் பிரபலமான அனைத்து வகைகளும் இங்கு பிரபலம். சுவையும் , தரமும் மிக்க இந்திய உணவுவகைகள் வாழை இலைகளில் பரிமாறப்படுவது சிறப்பு. மீன் வகைகள் இங்கு பிரபலம்.Karu’s Indian Banana Leaf Restaurant
#5-01 SIME DARBY CENTRE,896 DUNEARN ROAD SINGAPORE-589472
அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம்
இந்திய உணவு வகைகளில் பிரபலமான செட்டிநாட்டு உணவு வகைகள் இங்கு கிடைக்கும். மிகப்பிரபலமான இதன் கிளைகள் தீவு முழுவதும் பிரபலம். சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் பாரம்பரியமிக்க செட்டிநாட்டு சமையல் முறைகளை பயன்படுத்தி சமைக்கப்படுவதால் அனைவரும் விரும்பும் வகையில் உணவு வகைகள் கிடைக்கின்றன.76-78 Racecourse Road, Singapore – 218575 போன்: 62965545
Westgate shopping mall,04-08, 3 Gateway Drive Singapore – 608532. போன்: 65665545
102, Syed Alwi Road,,Singapore – 207678. போன்: 65665545
51 Changi Business Park Central 2, #02-07. The signature , Singapore-486066 போன்: 65885545
சகுந்தலாஸ் பூட் பேலஸ்
இந்திய-சீன உணவு வகைகள் கலந்த புதிய பரிமானமான உணவு வகைகளை இங்கு சுவைக்க முடியும். சைவம் முதல் அசைவம் வரை அதிக வகைகளில் உணவு வகைகளை இங்கு சுவைக்கலாம். உணவகங்களோடு , வீட்டிற்கே வந்து விநியோகம் செய்தல், மற்றும் விசேஷங்களில் பரிமாறுதல் போன்றவற்றையும் செய்வதில் இந்த நிறுவனம் பிரபலம்.66, Race Course Road Singapore 218570. Tel: 6293-6649 Fax no: 6293 4357
151, Dunlop Street Singapore 209466
NO.8 ,Changi Park ,Avenue 1 UE BIz Hub East, #01-53 Singapore 486018
88, Syed Alwi Road Singapore 207667
காயத்ரி ரெஸ்டாரண்ட்
மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உணவகம் சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தை ரசித்தவாறே உணவு உண்ணும் வகையில் அமைந்துள்ளது. உள்ளூர் பிரபலங்கள் முதல் உள்ளூர்வாசிகள் அனைவராலும் அறியப்பட்ட இந்த உணவகம் பாபட் முறையில் உணவு பரிமாறுகிறது.212 Telok Ayer Street, (S) 068645 Tel: 6225 4221

Concorde Hotel & Shopping Center, 100 Orchard Road, #01-05, (S) 238840 Tel: 6732 5273

122 Race Course Road, #01-01, (S) 218583, Tel: 6291 1011 (R), Tel: 629204544 (O)
Fax: 6297 4850

முத்து’ஸ் கரி
பாரம்பரியமிக்க தென்னிந்திய உணவு வகைகளுக்கு இந்த உணவகம் பிரபலம். சைவ மற்றும் அசைவ உணவுகள் அதன் பாரம்பரியம் மாறாமல் தருவதில் 50 ஆண்டுகளாக சேவையாற்றும் இந்த நிறுவனம் பல கிளைகளை கொண்டது.138 Race Course Road #01-01 S (218591) Call : 6392 1722 Fax: 6392 1382
3 Temasek Boulevard #B1-109/177 Suntec City Mall S (038983) Phone: 6835 7707 Fax: 6835 7827
சட்னி மேரி
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான உணவு வகைகளை இங்கு ஒரே இடத்தில் சுவைக்க முடியும். வாடா இந்திய முதல் தென்னிந்தியா வரை உள்ள பிரபலமான உணவு வகைகள் இங்கு கிடைக்கும்.Unit: 036-056, Viewing Mall South,Terminal 2, Singapore Changi Airport 60 Airport Boulevard, 819643 Tel: +65 65462790
719 East Coast Road, 459069 Tel: 6242 4468 Fax: 6241 0478
சாமீ’ஸ் கரி
1950 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகம் சுவை மிக்க சைவ மற்றும் அசைவ வகைகளை தருவதில் சிறுப்புவாய்ந்ததாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுப்பிரியர்களிடம் பெயர் பெற்றது. சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகம் தற்போது பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.SAMY’S CURRY RESTAURANT PTE LTD 25 Dempsey Road Singapore 249670 Tel : 6472 2080 Fax : 6474 5024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here