சிங்கப்பூர் முதலை பண்ணை

0
460

சிங்கப்பூரில் உள்ள செராங்கூன் சாலையின் மேல் புறப் பகுதியில் உள்ளது இந்த முதலை பண்ணை. இதற்கு தான் மோ ஹோங் ரெப்டைல் ஸ்கின் மற்றும் முதலை பண்ணை என்ற பெயர்கள் உண்டு. இந்த முதலை பண்ணை கடந்த 67 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. சிங்கப்பூரின் மிகவும் பழமை வாய்ந்த முதலை பண்ணை என்றால் அது இந்த பண்ணை தான்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில், 1945-ஆம் ஆண்டு தான் நா சுவா (Tan Gna Chua) எனும் வியாபாரி, முதலை தோளினை வர்த்தகம் செய்யும் வியாபாரத்தை தொடங்கினார். அதற்காக இங்கு முதலை பண்ணையை தொடங்கினார். தனது சொந்த வீட்டினையே முதலை பண்ணையாக வடிவமைத்தார். ஆரம்பத்தில் வெறும் 10 முதலைகளோடு தனது தொழிலை தொடங்கினார். பின்னர் அது குட்டிகளை போட்டு அவரது வியாபாரத்தை பெருக்கியது. முதலைகளின் தோலினைக் கொண்டு பர்ஸ்கள் மற்றும் கை பைகள் செய்தார். மேலும், முதலை கறிகளையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். தனியார் நிறுவனமாக இருந்த இந்த முதலை பண்ணை பற்றி அருகாமையில் இருந்த மக்கள் யாருக்கும் தெரியாமல் இருந்தது.

1972-ஆம் ஆண்டு லூயிஸ் மவுண்ட்பேட்டன் இங்கு வருகை தந்தார். அதன் பிறகே இந்த இடம் உள்ளூர் தொலைக்காட்சியின் வாயிலாக பிரபலமடைய தொடங்கியது. பொதுமக்கள் இங்கு வந்து பார்வையிட தான் மோ ஹோங் எந்த ஒரு கட்டண வசூலிலும் ஈடுபடாமல் இலவசமாக கதவுகளை திறந்து வைத்திருந்தார். 10 முதலை அப்போது 100 ஆக பெருகி வியாபாரம் விருத்தியடைந்தது. 2000-ஆவது ஆண்டில் 85 வயதான நிலையில் தான் மோ காலமானார். அவரது இறப்புக்கு பின்னர் 30 மில்லியன் டாலர் சொத்துகள் அவரது இரு பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

சிங்கப்பூரில் இருந்த மேலும் ஒரு முதலை பண்ணை என்றால் அது நியோ டியு கிரெசண்ட் பகுதியில் இருந்த லாங் குவான் ஹங் முதலை பண்ணை தான். அங்கு 8,000 முதலைகள் இருந்தன. ஜுராங் பறவைகள் சரணாலயத்திற்கு எதிராக இது இருந்து வந்தது. 2006-ஆம் ஆண்டில் கடன் தொல்லையால் இந்த முதலை பண்ணையும் மூடப்பட்டு விட்டது.

Address: 790 Upper Serangoon Road, Singapore 534660

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here