சிங்கப்பூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்

0
650

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கிறது செல்வத்தை அள்ளி தரும் ஸ்ரீ நிவாசபெருமாள் கோயில். சிங்கப்பூரில் அமைந்திருக்கும் பழைமையான கோயில்களின் பட்டியலில் இந்த கோயில் முக்கியம் வாய்ந்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனியரால் நரசிங்கம் என்பவருக்கு 1855-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த இடம் விற்கப்பட்டது. அந்த இடத்தில் நரசிங்கப் பெருமாள் கோயிலை கட்டி மூலவராக நரசிங்க பெருமாளை வைத்து வழிபட்டு வந்தார்.  கோயிலைச் சுற்றி நரசிம்ம பெருமாள், மகா லட்சுமி, ஆண்டாள், ஆஞ்சநேயர், கருடர் இவர்களுடன் கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள அரசமரத்தடியில் பிள்ளையாரும் அருள்பாலித்து வந்தனர். பின்னர் 1907-ஆம் ஆண்டு இக்கோயில் முகமதிய இந்து அறக்கட்டளை வாரியத்தினால் மேலாண்மை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் முழு அதிகாரத்தின் கீழ் இந்த கோயில் கொண்டு வரப்பட்டது. 1963-ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலை நடைபெற்று இராச கோபுரம், பிள்ளையார் சந்நிகள் நிறுவப்பட்டன. தற்போதுள்ள வடிவத்துக்கு இந்த கோயில் 1966-ஆம் ஆண்டு தான் புணரமைக்கப்பட்டது. இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், கோயிலின் மூலவரே மாறிய விந்தை தான். நரசிம்ம பெருமாள் கோயிலாக இருந்த இக்கோயில் காலமாற்றத்தால் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலாக உருமாறியது. விஷ்ணுவின் நரசிம்ம அவதார உருவத்துக்கு பதிலாக திருப்பதி வெங்கடேச பெருமாள் உருவத்துக்கு ஒத்த திருவுருவத்தைக் கோயில் மூலவர் பெற்றார். இதற்காக இந்தியாவிலிருந்து கற்சிலை கொண்டு வரப்பட்டு நிர்மானிக்கப்பட்டது. ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் வளாகத்திலேயே திருமண மண்டபம் ஒன்றும் 1965-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1966-ஆம் ஆண்டு இதன் இராச கோபுரம் எழுப்பப்பட்டு குடமுழுக்கு விழா கோலாகலமாக நிகழ்ந்தது. நவம்பர் 1978-ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு சிங்கப்பூர் தேசிய நினைவு சின்னங்கள் பாதுகாப்பு வாரியத்தால் அரசாங்க அங்கீகாரம் வழங்கப்பட்டது.

முக்கிய விழாக்கள்:

புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி – இந்நாளில் இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்துப் பெருமாளை வழிபடுவது வழக்கம். மறுநாள் காலை சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசல் திறந்து தரிசனம் செய்த பிறகே பக்தர்கள் தங்கள் விரதத்தை முடிப்பார்கள். இவ்விழா 1900களில் இருந்து தொடங்கப்பட்ட நடந்து வருகிறது.

Address: 397 Serangoon Road, Singapore 218123

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here