சீனத் தோட்டம்

0
403

சிங்கப்பூரின் சீனத் தோட்டம் சாலையில் அமைந்துள்ளது இந்த சீனத் தோட்டம்(Chinese Garden). சுமார் 13.5 ஹெக்டர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இது 1975-ஆம் ஆண்டு புகழ்பெற்ற தைவான் கலைஞர் யுவென்-சென் யூ எனும் ஆசிரியரால் வடிவமைக்கப்பட்டது. வட சீனாவை ஆட்சி செய்த சங் வம்சத்தினரின் கட்டக்கலையை பிரதிபலிக்கும் வகையில் இந்த சீனர்களின் தோட்டத்தில் உள்ள கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த தோட்டத்தில் சீன பகோடோ, பொன்சாய் மரங்கள் மற்றும் அழகிய குளம், பாலங்கள், டீ இல்லம், கல் சிங்கம், ஆமைகளின் அருங்காட்சியகம் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுச் சூழல் என சுற்றுலா பயணிகளின் மனதைக் கவரும் பல சுவாரஸ்யங்கள் இந்த தோட்டத்தில் உள்ளன. சீனர்களின் தோட்டத்தை சுற்றிப் பார்க்க சரியான நேரமாக சீனர்களின் புத்தாண்டு(ஜனவரி/பிப்ரவரி) மற்றும் செப்டம்பர் மாதங்களில் வந்தால், குங்பூ கலைஞர்களின் நேரடி சாகசம் மற்றும் அக்ரோபாடிக் ஷோக்கள் நிகழ்த்தப்படும். எம்.ஆர்.டியில் ஏறி சைனிஸ் கார்டன் ஸ்டேசனில் இறங்கினால், 5 நிமிட நடைப் பயணத்தில் இந்த தோட்டம் வந்து விடும். தோட்டத்திற்கு நுழைவு கட்டணம் என எதுவும் இல்லாதது கூடுதல் சிறப்பு.

நேரம்: காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை.

Address: 1 Chinese Garden Road, Singapore.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here