செம்மிஸ்

0
827

சிங்கப்பூரின் மிகப் பழமையான கத்தோலிக பள்ளியாக விளங்கிய செம்மிஸ் (Chijmes) தற்போது வணிக வளாகம் மற்றும் தேசிய நினைவுச் சின்னமாக திகழ்கிறது. செம்மிஸ் என்றால் மணியோசை என அர்த்தம். கத்தோலிக தேவாலயங்களில் மிகப்பெரிய மணிகள் கட்டப்பட்டு தினமும் மணியோசை எழுப்பப்படுவது வழக்கம்.

1852-ஆம் ஆண்டு புனித குழந்தை ஏசு அமைப்பைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் பெனாங்கிற்கு குடிபெயர்ந்தனர். அங்கு, பெண்கள் படிக்க பிரத்யேக ஒரு பள்ளியை உருவாக்க நினைத்தனர். 1840-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கால்டுவெல் வீட்டினை பார்த்த அவர்கள், அந்த இடத்தில் 1854-ஆம் ஆண்டு புனித குழந்தை ஏசு கான்வென்ட் பள்ளியை தொடங்கினர். 132 ஆண்டுகள் கல்வி சேவையில் இடம்பெற்றிருந்தது இந்த கான்வென்ட்.

பின்னர் காலமாற்றத்திற்கு ஏற்ப பள்ளியை ஒட்டி ஒரு வளாகம் கட்டப்பட்டது. அதன் பின்னர் தற்போது அந்த இடம், தேசிய நினைவு சின்னமாக சிங்கப்பூர் அரசால் ஏற்கப்பட்டுள்ளது. வளாக கட்டிடத்தில் உணவகங்கள், கடை வீதிகள் என சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளின் தேவைகளுக்காக பல வித பொருட்கள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கால்டுவெல் இல்லமாக இருந்த இடம் பின்னர், புனித குழந்தை ஏசு கான்வென்டாக மாறி இறுதியில் தற்போது செம்மிஸ் எனும் பெயருடன் அதன் நினைவாகவே திகழ்கிறது.

செம்மிஸ் வளாகத்தினுள் அஷினோ, பெர்லின், பாபி ரெஸ்டாரண்ட் & பார், கார்னிவோர் பிரேசிலியன் சுரஸ்கரியா, கோரியாண்டர் லீஃப், டிம்புலா, எல் மெரோ மெரோ, ஜியார்டினோ பிட்சா பார், கியூ-காக்கு ஜப்பானிஸ் பார்பிகு, ஹைலாண்டர், இகொசு ராமென், லெய் கார்டன் ரெஸ்டாரண்ட், லெய் யார்டு, மோவா டிக்கி ரெஸ்டாரண்ட், பாப்ரிகா&குமின், ப்ரைவ், ரெங்கா யா, டாட்சு, இசாகாயா, டொன்கஸ்டு, ஒயிட்கிராஸ் போன்ற பிரபல உணவகங்கள் உள்ளன. மேலும், இந்த வளாகம் திருமண புகைப்படங்கள் மற்றும் சினிமா படங்கள் எடுக்கவும் சிறந்த இடமாக விளங்குகிறது.

Address: 30 Victoria Street, Singapore 187996

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here