ஜாஸ்பர் தேசிய பூங்கா

0
354

ஜாஸ்பர் தேசிய பூங்கா (Jasper National Park), 1907-ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ராக்கி மலைத் தொடரில் உருவாக்கப்பட்டது. 10,878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அழகிய தேசிய பூங்கா மலையின் மேல் ஒய்யாரமாக வீற்றுள்ளது. பனிப்பாறைகள் நிறைந்த அடர்த்தியான மலை பூங்காவாக இந்த ஜாஸ்பர் பூங்கா திகழ்கிறது. வடமேற்கு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த ஜாஸ்பர் ஹாவ்ஸ், என்பவர் இங்கு வர்த்தகம் செய்தார். அவரின் நினைவாகவே இந்த இடத்திற்கு ஜாஸ்பர் தேசிய பூங்கா என்ற பெயர் வந்தது. இதுவரை இந்த பூங்காவிற்கு 21 லட்சம் மக்கள் வந்து சென்றுள்ளனர்.

1984-ஆம் ஆண்டு உலக பாரம்பரிய மையங்களில் ஒன்றாக இதனை யுனெஸ்கோ தீர்மானித்து சிறப்பித்தது. இதன் அருகே தான் சிறப்புமிக்க பான்ஃப் தேசிய பூங்காவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மலையேற்ற விரும்பிகளுக்கு இந்த பூங்கா ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. இதன் அருகே ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், சுண்ணாம்பு குகைகள் போன்ற பல இயற்கை அதிசயங்கள் பரந்து விரிந்து இயற்கையின் பேரழகை நம் கண்முன்னே கடை விரிக்கின்றன.

Address: Jasper, AB T0E 1E0, Canada

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here