ஜே.டபிள்யூ மரியாட் ஹோட்டல்

0
407

சிங்கப்பூரின் சொகுசு ஹோட்டல்களில் ஒன்றாக திகழ்கிறது ஜே.டபிள்யூ மரியாட் தென் கடற்கரை ஹோட்டல். இது ராஃபிள்ஸ் நகர் மற்றும் எஸ்பிளானடே பகுதியிலிருந்து 10 நிமிட நடைபயண தொலைவில் அமைந்துள்ளது. புகையிலை முற்றிலும் தடை செய்யப்பட்ட இந்த ஹோட்டலில் 2 உணவகங்கள், 2 நீச்சல் குளங்கள் மற்றும் 3 மதுபான பார்கள் உள்ளன. மேலும், இலவச வைஃபை, 24 மணி நேர உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளத்துடன் கூடிய மது பார் மற்றும் கார் பார்க்கிங் ஆகியன இந்த ஹோட்டலின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.

இங்குள்ள 634 தங்கும் அறைகள் முற்றிலும் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. காலணிகள், இலவச வைஃபை, 24 மணி நேர சேவை, எல்.இ.டி டிவி போன்ற அனைத்து சொகுசு வசதிகளும் இந்த ஹோட்டலில் உள்ளன. மொத்தம் 21 தளங்களை கொண்ட மிக பிரம்மாண்ட அழகிய கட்டிடத்தைக் கொண்டுள்ளது இந்த ஹோட்டல். ஹோட்டலின் உள்ளேயே ஏடிஎம்கள், துணி சலவை போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பணக்கார சுற்றுலா பயணிகள் விரும்பி தங்கும் ஹோட்டல்களில் ஜே.டபிள்யூ மரியாட் ஹோட்டலுக்கு எப்போதுமே தனி இடம் உள்ளது.

இந்த ஹோட்டலில் செக் இன் செய்யும் நேரம் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. நள்ளிரவில் செக் இன் நேரம் முடிவடைகிறது. செக் இன் செய்ய குறைந்த பட்ச வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு சீனா, இந்தியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய உணவுகள் சிறந்த முறையில் தங்கியுள்ள அறைக்கே வந்தே உகந்த முறையில் சேவை செய்யப்படும். குழந்தைகளுக்கான கூடுதல் படுக்கைகளும் இந்த ஹோட்டலில் கிடைக்கும். இந்த ஹோட்டலின் மேல் தளங்களில் இருந்து சிங்கப்பூரின் அழகினை கண்டு ரசிக்கும் அளவுக்கு முழுக்க கண்ணாடி மாளிகையாக இதனை வடிவமைத்துள்ளனர். இங்குள்ள பணியாளர்களும் பல மொழிகளை கற்றறிந்தவர்கள் அதனால் சுற்றுலா பயணிகள் எந்த ஒரு குழப்பம் மற்றும் இடையூறும் இன்றி இந்த ஹோட்டலை பயன்படுத்தலாம்.

Address: 30 Beach Road, Singapore 189763

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here