டிரோனில் படம்பிடிக்க சிறந்த சிங்கப்பூர் இடங்கள்!

0
489

சிங்கப்பூரில் பல வானுயர்ந்த கட்டடங்களும், பொறியியல் சவால் மிக்க கட்டடக் கலைகளும் நிறையவே உள்ளன. போட்டோகிராபி கலைகளில் அடுத்த தளத்திற்கு நாம் தற்போது முன்னேறியுள்ளோம். அதுதான் டிரோன் மூலம் படம்பிடிப்பது. தற்போது பல திருமணங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. கட்டடக் கலையின் ஆகாய மார்க்க அழகினை விமானத்தில் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சிறிய டிரோன்களை பறக்கவிட்டு புகைப்படமாக எடுத்து நாம் எளிதில் பார்க்க முடியும். அவ்வாறு டிரோனில் படம்பிடிக்க சிங்கப்பூரில் இருக்கும் 15 சிறந்த இடங்களை இத்தொடரில் நாம் காணலாம்…

ராச்சர் மையம் (Sky view)

சிங்கப்பூரின் ராச்சர் கால்வாய் அருகே உள்ள இந்த பழைய எச்.பி.டி. கட்டடங்கள் பல நிறத்தால் வண்ணம் தீட்டப்பட்டு காணப்படுகின்றன. சாதரணமாக இதனை புகைப்படம் எடுக்க விரும்பும் புகைப்படக் கலைஞர்களுக்கு பெரும்பாலும் எந்த ஒரு தெளிவான அழகான புகைப்படமும் சிக்கியதில்லை. இதுதான் உண்மையும் கூட, ஆனால், டிரோன் புகைப்படக் கலைஞர் ஒருவர் ஆகாய மார்க்கமாக இருந்து கிளிக்கிய இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது. கீழே உள்ள படம் அதன் தரை வழி மார்க்கமாக எடுக்கப்பட்டது.

(Land view)

Address: 1 Rochor Road, Singapore 180001

சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கம் (Sky view)

தேசிய அரங்கத்தின் நிழல்களில் மறைக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் அதன் கட்டிடக்கலையின் தனித்துவத்திற்கான போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. புகழ்பெற்ற ஜப்பானிய கட்டிடக் கலைஞரான கென்ஸோ டாங்கினால் வடிவமைக்கப்பட்ட இந்த அரங்கில் பல பெரிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. 1989ம் ஆண்டில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் உலக சுற்றுப்பயணம் போன்ற பல முக்கிய இசை நிகழ்ச்சிகளும் இங்கு அரங்கேற்றம் ஆகின. இதன் ஆகாய மார்க்க புகைப்படம் நமக்கு ஒரு வைரத்தின் தோற்றத்தை காட்டுகின்றது.

(Land view)

Address: 2 Stadium Walk, Singapore 397691

மேக்ரிட்சி நீர்த்தேக்கம் (Sky view)

மேக்ரிட்சி நீர்த்தேக்கத்தின் இந்த புகைப்படம் ஒரு இன்டி பேண்ட் ஆல்பத்தின் அட்டைப் போல் தெரிகிறது. மேக்ரிட்சி நீர்த்தேக்கம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள விரும்பும் அனைவருமே காடுகளுக்கு செல்லும் வழியில் இந்த வினோத ஜிக் ஜாக் மர பாலத்தை கண்டு நிச்சயம் ரசிப்பர். எப்படி இப்படியொரு ஜிக் ஜாக் பாலத்தைக் கட்ட முடியும் என்ற ஆச்சரியம் அனைவர் மனதிலும் நிச்சயம் எழும். டிரோன் கேமரா வழியே இதன் அழகிய ஆகாய மார்க்க புகைப்படங்கள் காண்பவர்களை நிச்சயம் ஈர்க்கும் ஒன்று என்றால் அது மிகையல்ல.

(Land view)

Address: Reservoir Road, Singapore

நன்யாங் பாலிடெக்னிக் கட்டிடம் (Sky view)

நன்யாங் பாலிடெக்னிக் கட்டிடத்தை டிரோன் வாயிலாக பார்வையிட்டால் அது குதிரையின் லாடம் போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது நமக்கு புலப்படும். சிங்கப்பூரின் ஆங் மோ கிவோ அவன்யூவில் இந்த பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது.

(Land view)

Address: 180 Ang Mo Kio Ave 8, Singapore 569830

சிங்கப்பூர் அறிவியல் மையம் (Sky view)

1977ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கட்டப்பட்ட இந்த சிங்கப்பூர் அறிவியல் மையம் காண்போர் அனைவரின் மனங்களையும் வெகுவாக கவரக்கூடியது. அதன் கீழ் புறத்து தோற்றமே அழகு என்றால் அதன் ஆகாய மார்க்க தோற்றம் ஹாலிவுட் படமான மார்ஸில் மேட் டாமன் குடியிருந்த கூடாரம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.

(Land view)

Address: 15 Science Center Road, Singapore 609081

ஜுராங் கிழக்கு நீச்சல் வளாகம் (Sky view)

மிகப்பெரிய மூக்கு போன்றும் நீட்டிய நாக்கு போன்றும் தோற்றம் அளிக்கும் இந்த ஜுராங் கிழக்கு நீச்சல் வளாகம் சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த பொழுது போக்கு தளம். சிங்கப்பூர் அரசால் கட்டப்பட்ட மிகப்பெரிய பொது நீச்சல் குளம் இது. இதில் செயற்கை அலைகளும் உண்டாகும் விதமாக இந்த நீச்சல் குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காவாக மட்டுமின்றி புகைப்படத்துக்கும் தீனி போடுகிறது இந்த நீச்சல் வளாகம்.

(Land view)

Address: 21 Jurong East Street 31, Singapore 609517

என்.டி.யு பயனியர் அண்ட் க்ரெசண்ட் ஹால்ஸ் (Sky view)

வான்வழியாக பார்த்தால் இவற்றை கட்டிடங்கள் என்று யாராலும் கூற முடியாத வண்ணம் கார்ட்டூனில் வரும் பொம்மைகள் போலவும் காற்றாடி போலவும் இந்த என்.டி.யு. பயனியர் அண்ட் க்ரெசண்ட் ஹால்ஸ் காணப்படுகின்றன. அடுக்குமாடி தொகுதி குடியிருப்புகளான இந்த கட்டிடத்தில் கால்பந்தாட்ட மைதானம், கூடைப்பந்து கோர்ட் போன்றவை உள்ளன. மேலே உள்ள Y- வடிவ கூரைகள் சூரிய ஆற்றலை வழங்கும் சூரிய சக்தி பேனல்களாகும்.

(Land view)

Address: 156 Nanyanga Crescent, Singapore 637125

எஸ்ப்ளனேட் திரையரங்கம் (Sky view)

சிங்கப்பூரின் உள்ள உலகப் புகழ்பெற்ற எஸ்ப்ளனேட் திரையரங்கத்தின் டாப் வியூ அழகினை தான் நாம் இப்போது கண்டு ரசிக்கிறோம். உலகின் பிரபல நிகழ்ச்சிகள் அரங்கேறும் இந்த பிரம்மாண்ட திரையரங்கின் கீழ்ப்புற பகுதி ஒரு மாயையை உண்டாக்குவது போன்ற வட்ட வடிவிலான தோற்றத்தை காண்பிக்கின்றது. ஈட்டி போன்ற இதன் மேல் முனையோ நம்மை மேலும் கவர்கிறது. 450 இருக்கைகள் மற்றும் 600 பேர் நின்று பார்க்கக் கூடிய பிரம்மாண்ட அரங்கம் இதில் உள்ளது.

(Land view)

Address: 1 Esplanade Dr, Singapore 038981

பிஷன் பேருந்து இடமாற்ற நிலையம் (Sky view)

ஒரு மிகப்பெரிய சதுரம் அதன் நடுவில் ஒரு செவ்வகம் இரு மூலைகளில் ஒவ்வொரு கேரம் போர்ட் துளைகள் வைத்தது போன்ற வடிவமைப்புக் கொண்ட இது பிஷன் பேருந்து இடமாற்ற நிலையமாகும். இது விண்டேஜ் வானொலி போன்றும் காட்சியளிப்பதாக இதனை படம் எடுத்த டிரோன் புகைப்படக் கலைஞர் தெரிவித்துள்ளார்.

(Land view)

Address: 514 Bishan Street 13, Singapore 570514

புக்கிட் பேடோக் ஓட்டுநர் மையம் (Sky view)

மேஸ் விளையாட்டுப் போன்று மேலே இருந்து பார்த்தால் புக்கிட் பேடோக் ஓட்டுநர் மையத்தின் தோற்றம் இருக்கின்றது. இங்கு வாகன ஓட்டிகள் பயிற்சி பெறுவதற்கான 8 வடிவம் போன்ற பல செயற்கை தடைகள் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன.

(Land view)

Address: 815 Bukit Batok West Ave 5, Singapore 659085

சிங்கப்பூர் ஆம்னி திரையரங்கம் (Sky view)

சிங்கப்பூரில் 1977ஆம் ஆண்டு கட்டப்பட்ட சிங்கப்பூர் ஆம்னி திரையரங்கின் டிரோன் காட்சிகள் மக்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளன. முக்கோணம் மற்றும் கண் போன்ற அமைப்பு இதில் காணப்படுகின்றது. சிங்கப்பூரின் முதல் ஐமேக்ஸ் திரையரங்கமும் இதுதான்.

(Land view)

Address: 21 Jurong Town Hall Road, Singapore 609433

செல்வ நீரூற்று (Sky view)

அயர்ன் மேன் படத்தில் டோனி ஸ்டார்க்கின் நெஞ்சில் பொருத்தப்பட்டுள்ள ஆர்க் ரியாக்டர் போன்று காட்சியளிக்கும் இந்த இடம் சன்டெக்கில் உள்ள செல்வ நீரூற்றாகும். இரவில் செல்வ நீரூற்றில் இருந்து வண்ண நீரூற்று நடனங்கள் வெளிப்படும் போது இந்த படத்தை டிரோன் மூலம் அசத்தலாக எடுத்துள்ளனர்.

(Land view)

Address: Suntec City, 3 Temasek Boulevard, Singapore 0389833

நன்யாங் பசுமைக்கூரை பல்கலைக் கழகம் (Sky view)

சிங்கப்பூரின் நன்யாங் பகுதியில் உள்ள NTU School     of Art, Design and Media Building-ன் கட்டிடக் கலை தான் இது. ஆனால், எக்ஸ்மேன் படத்தில் வரும் ஹேவோக் எனும் நெருப்பு விடும் இளைஞனின் வளையங்கள் இவை அல்ல… கல்லூரியின் மேல் பாலம் அமைத்து பசுமை கூரையை உருவாக்கியுள்ளனர். இதன் மேல் ஜாகிங்கும் போகலாம்.

(Land view)

Address: 50 Nanyang Ave, Singapore 639798

கிளார்க் படகுத்துறை (Sky view)

ஹாலிவுட் படங்களில் கிரகங்களை அழிக்க பயன்படுத்தப்படும் ராட்சத லேசர் லாஞ்சுகள் போன்று ஆகாய மார்க்கமாக பார்க்கும் போது தெரியும் இந்த இடம் கிளார்க் படகுத்துறையின் இரவு வாழ்க்கை. சிங்கப்பூரில் இரவு வாழ்க்கையை குதூகலிக்க இந்த இடத்தை விட சிறந்த இடம் வேறொன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இங்கு இரவு பப்கள், உணவகங்கள் செயல்படுகின்றன.

(Land view)

Address: 3 River Valley Road, Singapore 179024

நன்யாங் பாலிடெக்னிக் (Sky view)

போக்கேமான் விளையாட்டில் வரும் புகழ்பெற்ற கியோகிரே எனும் தவளை போன்ற வடிவம் கொண்ட மிருகம் டாட்டூக்களை போட்டவாறு பலவற்றை ஒன்றிணைக்கும், நன்யாங் பாலிடெக்னிக்கில் உள்ள வட்ட சாலையை சுற்றியுள்ள புல்வெளிகள் நீல நிறத்தில் இருந்திருந்தால் மேற்சொன்ன அந்த கியோகிரேவுக்கு ஈடாக இருந்திருக்கும்..

கியோகிரே

(Land view)

Address: 180 Ang Mo Kio Ave 8, Singapore 569830

குட்டித் தீவு நாடான சிங்கப்பூரில் டிரோன் மூலம் வித்தியாசமான புகைப்படங்கள் எடுக்க மேலும் பல சிறந்த இடங்கள் உள்ளன. அதில் இத்தொடரில் நாம் சிலவற்றை பற்றி பார்த்தோம்.. உங்களுக்கு எந்த இடத்தை பற்றி தெரிந்தாலும் கீழே தகவல்களை பரிமாறிக் கொள்ளுங்கள்..

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here