பலேலாய் புத்த கோயில்

0
671

சிங்கப்பூரின் பெடாக் வாக் பகுதியில் அமைந்துள்ளது இந்த பலேலாய் புத்த கோயில்(Palelai Buddhist Temple). சிங்கப்பூரில், இந்துக்கள் மற்றும் சீனர்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். சீன மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் கண்டிப்பாக ஒரு புத்த கோயில் அல்லது மடாலயம் அமைத்து வழிபடுகின்றனர், அல்லது புத்தரின் சித்தாந்தத்தை பின்பற்றுகின்றனர்.

1963-ஆம் ஆண்டு இந்தக் கோயில் 9 ஜலன் நிப்பா என்ற முகவரியில் தான் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. பின்னர், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடியதால், அந்த இடத்தில் இடப் பற்றக்குறை நிலவியதால் 1968-ஆம் ஆண்டில் தற்போது கோயில் உள்ள பெடாக் வாக் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பிராக்ரு பிரகாச தம்மக்கூன் (லுயாங் போர்)என்பவரால் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டது.

கோயிலை இடமாற்றம் செய்யவேண்டும் என விரும்பிய லுயாங் போர், அப்போது சிங்கப்பூரில் பெருஞ்செல்வந்தராக இருந்த வீ தியாம் சியூவை சந்தித்து கோயிலுக்கான இடத்தை பெடாக் வாக் பகுதியில் தானமாக பெற்றார். பின்னர், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மலேசியாவில் உள்ள சீனர்களின் நன்கொடையை பெற்று 1968-ஆம் ஆண்டில் கட்டுமான பணிகளை தொடங்கி 1973-ஆம் ஆண்டில் அதனை நிறைவு செய்தார். பாங்காக்கில் உள்ள தலைமை மதகுரு புன்னசிரி மகாதேராவை அழைத்து இந்த ஆலயத்தை திறந்தார். புதிய ஆலயம் பெரும் பரப்பளவில் கட்டப்பட்டவுடன் இங்கு வரும் புத்த துறவிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை பெரிதும் உயர்ந்தது. கடந்த 2004-ஆம் ஆண்டில் ஆலய நிர்வாகக் குழு கூடி மேலும், ஒரு புதிய கட்டிடத்தை ஆலய வளாகத்தினுள் அமைத்து பல நல்ல காரியங்களையும் தொண்டு சேவைகளையும் புரிந்து வருகின்றது.

Address: 49 Bedok Walk, Singapore 469145

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here