புதிய படைப்பு தேவாலயம்

0
388

சிங்கப்பூரின் மிகப்பெரிய தேவாலயம் என்ற புகழை கொண்ட தேவாலயம் இந்த புதிய படைப்பு தேவாலயம்(New Creation Church). 5,142 பிரார்த்தனை இருக்கைகள் கொண்ட இந்த பிரம்மாண்ட தேவாலயத்தில், ஞாயிறன்று மட்டும் 33,000 பேர் வழிபாடு செய்கின்றனர். இந்த தேவாலயத்தின் தலைமை போதகராக ஜோசப் பிரின்ஸ் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் ஜோசப் பிரின்ஸ் உள்ளிட்ட ஒரு சிறு குழு சிங்கப்பூரில் ஒரு மிகப்பெரிய தேவாலயத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டனர். 1983-ஆம் ஆண்டு ஜோசப் பிரின்ஸ், ஹென்ரி ஹியோ, டேவிட் ஹியோ மற்றும் ஜேக் ஹோ ஆகிய அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வெளிநாடுகளிடமிருந்து நன்கொடைகளை பெற்று 1984-ஆம் ஆண்டு இந்த தேவாலயத்தை தொடங்கினர். அப்போது ஞாயிற்று கிழமைகளில் சராசரியாக 25 பேர் மட்டுமே வந்து வழிபாடு நடத்தினர். பின்னர் அது 150 ஆக 1990களில் வளர்ச்சியடைந்தது. தலைமை போதகராக அதே ஆண்டில் ஜோசப் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார்.

1999-ஆம் ஆண்டு சன்டெக் சிட்டி வளாகத்திற்கு இடம் மாற்றப்பட்டது. பின்னர் 2004-ஆம் ஆண்டில் ஞாயிறு தோறும் வருவோரின் எண்ணிக்கை 10,000 ஆக உயர்ந்து.

தேவாலய பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வருகை தருவோரின் எண்ணிக்கை உயர உயர ஆலய வருமானமும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தங்களுக்கு என்றே பிரத்யேக இடம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று எண்ணி, சன்டெக் வளாகத்தில் இருந்து தற்போது உள்ள 5000 இருக்கைகள் கொண்ட புனோ விஸ்டாவில் உள்ள ஸ்டார் பேக் அரங்கில் தேவாலயத்தை 23 டிசம்பர் 2012-ஆம் தேதி மாற்றி அமைத்தனர். பின்னர் 2013-ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை இமாலய வளர்ச்சியடைந்து 30,000 பேர் வருகை தர ஆரம்பித்தனர். இந்த தேவாலயத்தின் வாயிலாக பல தொண்டு சேவைகளும், கல்வி வளர்ச்சிக்கான அடிப்படை உதவிகளையும் வழங்கி வருகின்றது.

Address: 51 Cuppage Road, #09-01, Singapore 229469

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here