புனித ஜேம்ஸ் மின் நிலையம்

0
445

சிங்கப்பூரின் புகித் மெராஹ் துறைமுகத்திற்கு முன்னதாக உள்ள புனித ஜேம்ஸ் மின் நிலையம், தற்போது இசை மற்றும் இரவு பொழுதுபோக்கு மையமாக திகழ்கிறது. வைவோ சிட்டிக்கு அருகே உள்ள இது, 1926-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ததால், இந்த இடத்திற்கு புனித ஜேம்ஸ் மின் நிலையம் என பெயரிடப்பட்டது. தற்போது பொழுது போக்கு தலமாக உருமாறிய போதிலும், பழைய பேர் இன்னமும் நீடித்து நிலைத்து இருக்கிறது.

1924-ஆம் ஆண்டு ஏ.எச். ப்ரீஸ் என்னும் பொறியியல் நிபுணரால் புனித ஜேம்ஸ் முனை தேர்வு செய்யப்பட்டது. அங்கே நிலக்கரி மற்றும் கடல் நீரினைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து சிங்கப்பூரில் பயன்பாட்டில் இருக்கும் ரயில் மற்றும் டிராம் வண்டிகளுக்கும் மேலும் துறைமுகத்திற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய தொடங்கினர். அலெக்சாண்டர் கோர்டன் மற்றும் ப்ரீஸ் ஆகிய இருவரும் தான் இந்த கட்டிடத்தைப் அப்போது கட்டி மின்சாரத்தை உற்பத்தி செய்தனர். பின்னாளில் வேறு பல வகையில் மின்சாரம் சிங்கப்பூர் நகரத்திற்கு உற்பத்தியாகவே இந்த இடம், தற்போது இரவு பொழுதுபோக்கு மையமாக மாறியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பகல் நேரங்களில் மற்ற இடங்களை சுற்றிவிட்டு இரவு நேரத்தை பார்ட்டி மற்றும் இசையுடன் கொண்டாட இந்த இடத்தை தேர்வு செய்வது வழக்கம்.

1991-ஆம் ஆண்டில் தான் இந்த இடம் இரவு பொழுதுபோக்கு மையமாக மாறும் திட்டம் போடப்பட்டது. ஆனால், அதற்கான அனுமதி மற்றும் இன்னும் பிற பணிகள் நடக்க காலதாமதம் ஆனது. பின்னர் 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி இந்த இடம் அதிகாரப்பூர்வ இரவு கேளிக்கை விடுதியாக திறக்கப்பட்டது. சிங்கப்பூரில் இரவு நேரத்தை கழிக்க இதை விட வேறு எந்த இடமும் இல்லை என்னும் அளவிற்கு பல விதமான பார்கள், பப்கள் மற்றும் நடன அரங்குகள் உள்ளன. சுமார் 10,000 பேர் வரை தினமும் இரவை கொண்டாடி வருகின்றனர் என்பது இந்த இடத்திற்கான கூடுதல் சிறப்பு.

Address: 3 Sentosa Gateway, Singapore 098544

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here