பொதுமக்கள் போர் நினைவகம்!

0
665

சிங்கப்பூரின் படாங் மற்றும் சிட்டி ஹாலுக்கு அருகே அமைந்துள்ளது இந்த பொதுமக்கள் போர் நினைவகம் (Civilian War Memorial). இரண்டா உலகப்போரின் போது ஜப்பானிய படைகளின் ஆக்கிரமிப்புகளால் இறந்த சிங்கப்பூர் மற்றும் சீனாவைச் சேர்ந்த மக்களின் நினைவாக இந்த போர் நினைவகம் கட்டப்பட்டுள்ளது. இது சிங்கப்பூரின் நினைவுச்சின்னமாகவும் வீரத்தின் பாரம்பரிய அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது.

1942 முதல் 1945-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரில் ஜப்பானிய பேரரசால் நிகழ்த்தப்பட்ட பசிபிக் போரின் போது, எண்ணற்ற சீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது சூக் சிங் படுகொலை என்று நினைவுக் கொள்ளப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் இருந்து ஜப்பானிய அரசுக்கு எதிராக செயல்படுவோர் என ஒரு பட்டியலை தயார் செய்து 18 முதல் 50 வயது வரை உள்ளவர்களை கொன்று குவித்தது. இந்த படுகொலை சம்பவத்தை நிகழ்த்திவிட்டு வெறும் 6,000 பேரை மட்டுமே கொன்றதாக ஜப்பான் கணக்கு காட்டியது. ஆனால், 25,000 முதல் 50,000 பேர் வரை இந்த கொடூர தாக்குதலால் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாகவே இந்த போர் நினைவகம் சிங்கப்பூரில் நிறுவப்பட்டுள்ளது.

மார்ச் 13, 1963-ஆம் ஆண்டு சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ, கடற்கரை சாலை அருகே போர் நினைவகம் கட்ட ஒரு இடத்தை ஒதுக்கினார். பின்னர் 1966-ஆம் ஆண்டு இதன் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 15 பிப்ரவரி 1967-ஆம் ஆண்டு இந்த பொதுமக்கள் போர் நினைவகம் பிரதமர் லீ குவான் யூவால் திறக்கப்பட்டது. சுமார் 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் செலவில் இதன் கட்டுமான பணிகள் நிறைவேற்றப்பட்டன. இந்த நினைவகத்தை சிங்கப்பூரின் புகழ்பெற்ற கட்டுமான நிபுணர் லியாங் ஸ்வீ லிம் கட்டினார். 230 அடி உயரம் கொண்ட 4 தூண்கள் கொண்ட இதன் கோபுரம் தனித்துவம் வாய்ந்த கட்டக்கலைக்கு ஒரு சான்றாக திகழ்கிறது. இங்குள்ள 4 தூண்களும் சிங்கப்பூரில் வசிக்கும் சீனர்கள், ஐரோப்பா ஆசியர்கள், இந்தியர்கள் மற்றும் மலாய் மக்களை குறிப்பிடும் படி கட்டப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 15 பிப்ரவரி தேதியினை தேசிய பாதுகாப்பு தினமாக அறிவித்தார் பிரதமர். அந்நாளில் இங்கு வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்துக்கு பொதுமக்கள் பார்வையிட்டு மலர் வளையங்களை வைத்து நினைவஞ்சலி செலுத்துவர். அரசு சார்பில் இங்கு ராணுவ மரியாதையும் செலுத்தப்பட்டு வருகின்றன.

Address: Bras Basah Road & Beach Road intersection, Singapore 189701

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here