வங்காளதேச கனடா இந்து கோயில்

0
704

வங்காளதேச கனடா இந்து கோயில், டொரோண்டோ, ஒண்டரியோ, கனடா பகுதியில் உள்ள மிகப்பெரிய இந்து கோயில் மற்றும் அறக்கட்டளை ஆகும். 1995-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆலயம், கனடா நாட்டில் இந்து மதத்தை வளர செய்வதில் மிகப்பெரும் பங்காற்றியது என்று சொன்னால் அது மிகையல்ல. 2005-ஆம் ஆண்டு கனடா அரசின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இந்த கோயிலின் அறக்கட்டளைக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயிலில், சிவன், விநாயகர், ஸ்ரீ காளி மாதா, சிவன் மற்றும் பார்வதி, ஸ்ரீ லஷ்மி நாராயணன், ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் ராதா, சரஸ்வதி தேவி, பாபா லோகநாத் ஆகியோர் வழிபாட்டு தெய்வங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தின் முக்கிய வழிபாடாக துர்கா பூஜை மற்றும் வங்காள புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுவது இக்கோயிலின் தனிச் சிறப்பு. வங்காளதேசத்தில் இருந்து குடிபெயர்ந்த இந்து மக்கள் தங்கள் வழிபாட்டுக்காக ஒன்றிணைந்து உருவாக்கிய மிகப்பெரிய அறக்கட்டளை ஆலயம் தான் இந்த வங்காளதேச கனடா இந்துக் கோயில்.

மேலும், ஷியாமா பூஜை, தீபாவளி, ஜன்மாஷ்டமி, லஷ்மி பூஜை, மகா சிவராத்திரி, ஹோலி, ரத யாத்திரை போன்ற சுப நிகழ்ச்சிகளும் இந்தக் கோயிலில் கோலாகலமாக நடைபெறும். கனடாவில் உள்ள இந்துக்கள் இங்கு வருகை தந்து வழிபடுவர். மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்த பக்தி ஸ்தலம் அமைதியையும், தியானம் செய்யும் அழகான சூழலையும் வழி வகுத்து தரும்.

Address: 16 Dohme Ave, East York, ON M4B 1Y9, Canada.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here