வாட் ஆனந்த மெட்டரமா தாய் புத்த கோயில்

0
565

சிங்கப்பூரின் ஜலன் புகித் மெரா சாலையில் அமைந்துள்ளது வாட் ஆனந்த மெட்டரமா தாய் புத்த கோயில் (Wat Ananda Metyarama Thai Buddhist Temple). பர்மா புத்த கோயிலை போலவே இந்த கோயிலும் தேர்வாத புத்த கோயிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1925-ஆம் ஆண்டு இந்தக் கோயில் கட்டப்பட்டது.

ஆரம்பத்தில் பாரம்பரிய சீன கட்டக் கலை அடிப்படியில் கட்டப்பட்ட இந்தக் கோயில், கால மாற்றத்தால், கடந்த 2014-ஆம் ஆண்டு நவீன கட்டிடமாக அழகமான தோற்றத்துடன் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், பாரம்பரிய சீன கோயில் போல இது தற்போது இல்லை. புத்த மதத்தை தற்காலத்துக்கு ஏற்றவாறு அதி நவீனமாக மக்களிடம் எடுத்துச் செல்லும் முனைப்புடன் தான் இந்தக் கோயில் தற்போது நவீனப்படுத்தப்பட்டது என அதன் நிறுவனர்கள் விளக்கம் தருகின்றனர். சிசர்ல் கட்டுமான நிபுணர்களால் இந்த கோயிலின் தற்போதைய வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

தம்மா வகுப்பறைகள், தியான அறைகள், அருங்காட்சியகம், உணவகம், ஓய்வறைகள் மற்றும் பல அம்சங்கள் இந்த புத்த கோயிலினுள் அமைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த சீனர்கள் உருவாக்கியதே இந்த கோயில். கடந்த 2014-ஆம் ஆண்டிற்கான உலக கட்டுமான விருது விழாவில் இதன் பிரத்யேக கட்டிடத்திற்கு பரிசு கிடைத்தது. வாட் ஆனந்தா இளைஞர் குழு ஒன்று 1966-ஆம் ஆண்டு இந்த கோயில் நிர்வாகத்தின் சார்பாக தொடங்கப்பட்டு பல்வேறு தொண்டு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Address: 50B Jalan Bukit Merah, Singapore 169545.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here