தமிழ் இலக்கியத்தில் ஆண் மற்றும் பெண் பாகுபாடு

0
584


–ஷாநவாஸ்

பெண் எழுத்தாளர் சுமக்கும் மரபுச் சுமை ஆண் எழுத்தாளர் சுமக்கும் சுமையிலிருந்து வேறுபட்டது. அது பெண் எழுத்தில் ஒலிப்பது இயல்பானது. ஆனால் அச்சுமையுடன் அவளது மூதாதையரின் சரித்திரங்களும், கதைகளும் புராணங்களும் பின்னிப் பிணைந்துள்ளன,அவளுள் இயல்பான ஒரு கதை சொல்லி இருப்பதை அவளுடைய பாட்டிகளும் கொள்ளுப் பாட்டிகளும் உணர்த்தியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் சொல் இருந்தது என்கிறது பைபிள். அது பெண்ணின் நாவிலிருந்து வந்திருக்கும் எனக்கும் அப்படித்தான் என் பாட்டியின் கதைகளிலிருந்துதான் நான் கதைகளை நேசிக்கத் தொடங்கினேன் , பெண்ணியத்தை மிகச்சிறப்பாக இலக்கியத்தில் கொண்டு வந்தவர்களில் புதுமைப் பெண்ணை முரசறைந்து படைத்த படைப்பாளி, திஜா(மோகமுள்,அம்மா வந்தாள்),லாசரா(சிந்தாநதி),சுஜாதா(எப்போதும் பெண்),ஆரம்ப கால பாலகுமாரன்(மெர்குரிப் பூக்கள்),கி.ரா.(பல கிராமம் சார்ந்த ஆக்கங்கள்) போன்ற பல ஆண் எழுத்தாளர்களுக்கும் இந்தப் பங்களிப்பில் தவிர்க்க இயலாத இடம் இருக்கிறது.என் வாசிப்பில் பெண் எழுத்தாளர்களை விட ஆண் எழுத்தாளர்களே பெண்களின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிபடுத்தியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன் ,சிங்கப்பூரில் இலக்கியம் குறித்து மேலோட்டமான பார்வைகளை இனி சொல்லிவிட்டு தப்பிக்க இயலாது, நிறைய வாசிப்புடன் நம் எதிரில் இருக்கும் சிவானந்தம் போன்றவர்களின் கேள்விகளுக்கான பதில்கள் இல்லாவிட்டால் தப்பிப்பது மிகவும் கஷ்டம். பெண் எழுத்தாளர்களின். விவரிப்புக்களை தாண்டிச் சென்று அவர்களின் படைப்புக்களில் ஆண் எழுத்தாளர் களின் விவரிப்புக்களுக்கு ஒர் உதாரணம் கேட்டார் சிவானந்தம்
பாமா எழுதிய “கதறல் “சிறுகதையை ஆண் எழுத்தாளர்கள் எழுதியிருந்தார்களென்றால் தாளித்திருப்பார்கள் என்று அந்தக் கதையை விவரித்து தப்பித்தேன் . கவிஞர் நெப்போலியன் தலைப்பையொட்டிய தாயாரிப்புகளோடுதான் எப்போதும் வருவார் ,நிகழ்வை சிறப்பாக வழி நடத்தினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here