பிக்சலின் அறிவு விழா

0
412
A.P. Raman

சிங்கப்பூரின் தமிழ் மொழி மாதத்தில் அறிவுத் தமிழுக்கும் இடம் உண்டு. நேற்று பிக்சல் குணா அளித்த நிகழ்ச்சி அறிவு பூர்வமானது. இன்றைய நடைமுறைக்குத் தேவையான து.

கல்வியாளர் டாக்டர் சந்துரு அவர்களின் முன்னிலையில் நடந்த இந்த வழக்கத்திற்கு மாறான நிகழ்வில், இன்றைய கணினிப் பார்வையில் மனித வாழ்வை எப்படி வளமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை பல அனுபவஸ்தர்கள் சுவையாகச் சொன்னார்கள்.

கணினி மற்றும் தொலைபேசிகளிலிருந்து நமக்கும் தெரியாமல் தகவல்கள் எவ்வாறு களவாடப்படுகின்றன என்பதை கவிதை மணத்துடன் திரு.கணேஷ் நாராயணனிடமிருந்து கேட்டபோது கவிதை ரசனையையே மறந்து திடுக்கிட்டோம். தமிழக 2G நினைப்பிலிருந்து இன்னமும் மீளாத நமக்கு 5G யின் சிறப்புகளை வரிசைப்படுத்தினார் இளைய தொழில் நுட்பர் திரு.சோமு ரவிச்சந்திரன். அடுத்த 10 ஆண்டுகளில் அதன் ஆக்கிரமிப்புகளைக் கேட்டால், மனிதனுக்கு அனுபவிப்பதைத் தவிர வேறு வேலையே இருக்காது எனத் தோன்றுகிறது .

இலங்கையின் சிங்கப்பூர் துணைத் தூதர் திரு. அமீர் அஜாத் அழகு தமிழில் அருமை உரை ஒன்றை அளித்தார்.இணையத் தமிழ் வளர்ச்சிகளை அவர் பட்டியலிட்டவிதம் அனைவரையும் கவர்ந்தது. தமிழும், அரபியும் இணைந்த அரபித் தமிழ்பற்றி அவர் தெரிவித்த குறிப்பு ரசனைக்குரியது.

அமைப்பின் தலைவர் திரு.குணசேகரன் அனைவரையும் கட்டிழுத்துப் போட்டுப் பேசிய வரவேற்புரையும், கணினி வழி நம் இளையர் பயன்படத் தகுந்தசாதனங்களை் புரியும்படி, விளக்கியதும் அனைவராலும் ஏற்கப்பட்டது.

14 ஏப்ரல்-மின்னியல் தமிழ்-புத்தாக்க அணுகுமுறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here