ஸ்ரீ இராமர் ஆலயம்

0
827

சிங்கப்பூரின் கடற்கரையை ஒட்டிய இடம் சாங்கி. இவ்விடத்தில் ஸ்ரீ இராமர் ஆலயம் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய காலத்தில்,சிறிய கிராமமாக இருந்த சாங்கியில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில், மரத்தடியின் கீழ் ஒரு சிறு வழிபாட்டு இடமாக ஸ்ரீ இராமர் ஆலயம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது. அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்க்கு அதுவழிபாட்டுத் தலமாகத் திகழ்ந்தது. இந்திய இராணுவத்தில் பாலம் அமைக்கும் பொறியியல் பிரிவில் பணியாற்றிய திரு.ராம் நாயுடு என்பார் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, 1945 -ஆம் ஆண்டில் தற்போது ஸ்ரீ இராமர்ஆலயம் அமைந்துள்ள நிலப்பகுதிகளைப் வெள்ளையர்களிடமிருந்து பெற்று ஆலயம் அமைத்தார். பின்னர் ஆலயத்தை மேலும் மேம்படுத்த விரும்பிய நிர்வாகத்தினர் மதுரையிலிருந்துஆலய சாஸ்திரமும், கட்டடக்கலையில் நிபுணத்துவம் பெற்ற மூவரை வருவித்துக்கோயில் பணியைப் தொடங்கினார்கள். ஆலயம் கடற்கரையை நோக்கி கிழக்கு முகமாக அமைந்திருப்பது இந்திய கோயிலமைப்பை குறிப்பிடுகிறது. வைணவக் கோயிலாக இருந்தாலும், சைவ சமயத்தினரும் வழிபட வேண்டும்என்ற பரந்த நோக்கில் அமைந்தது ஆலயம். கடற்கரைக்கு அருகிலிருப்பதால், ஈமச் சடங்கிற்குப் பிறகு, கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக சிவலிங்கம் பிரஷ்டை செய்யப்பட்டது. நகர வடிவமைப்புக்காக இந்த ஆலயமும் இடம்பெயரும் சூழல் உருவாகியது. ஆனால், அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. தியோ சொங் தீ தலையிட்டு உதவியிருக்காவிட்டால் கோயில் இப்போதிருக்கும் இடத்தில் இருந்திருக்காது.

1993 -ஆம் ஆண்டு கோவில் முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டது. நகர சீரமைப்பு காரணத்தால் சிங்கப்பூரின் மற்ற பகுதியிலிருந்த கோயில்கள் பாதிக்கப்பட்டன. சிறு கோவிலாகவும், பொருளாதாரத்தில், நிதி நிலையில் நிறைவாக இல்லா கோயில்களை ஒற்றிணைத்து ஒரே இடத்தில் வழிபாட்டுத்தலம் அமைக்க அரசாங்கம் ஒரு யோசனையை முன் வைத்தது. அதன்படி மூன்று கோவில்கள் இணைந்தன.1. காண்டோன்மெண்ட சாலையில் அமைந்திருந்த மன்மத காரூணீஸ்வரர் ஆலயம். 2. புக்கிட் தீமா குதிரைப் பந்தய வளாகத்தில் அமைந்திருந்த முத்து மாரியம்மன் ஆலயம். 3. கிராஞ்சி கடற்கரையில் அமைந்திருந்த பழனி ஆண்டவர் ஆலயம். மேற்கண்ட மூன்று சிறு கோயில்களும் இராமர் ஆலயத்துட ன் ஒன்றிணைந்து ஒரே ஆலயமாகின. 2004 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆலய நிர்வாகம் ஒரு ஆஞ்சநேயர் சிலையை அமைக்க எண்ணியது. அதன்படி 21அடி உயர ஆஞ்சநேயரைத் தமிழ் நாடு ஸ்தபதி திரு.கிருஷ்ணமூர்த்திமேற்பார்வையில் சிலை வடித்து 2005 -ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இராம நவமி, ஹனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி விழா, ஆடி பெருக்குத் திருவிழா, திருவிளக்குப் பூஜை, சுதர்சன, சண்டிஹோமங்கள் எனச் சமய விழாக்களும்,சமூக, மற்றும் கல்வித் தேவைகளையும் கோயில் நிறைவு செய்தது. சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் இந்த மூன்று கோயில்களையும் தவறாமல் பார்த்துச் செல்கின்றனர்.

Address: Sri Changi Village Road, 51 Changi Road,Singapore. 509908.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here