ஆதி 2 – சாகா வரம் பெற்றவனின் கதை

0
104

திரைப்பட இயக்கம் மற்றும் உருவாக்குதலில் ஆர்வமுள்ள குழு ஒன்றிணைந்து உருவாக்கிய ‘ஆதி’ எனும் குறும்படம் 10000 வருடங்களாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் பற்றிய கதை. இந்த கதை ‘மேன் ஃப்ரம் எர்த்’ எனும் ஆங்கில படத்தின் பாதிப்பில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டிருந்து. மூன்று வருடங்களுக்கு முன்வந்த இக்குறும்படத்தினைத் தொடர்ந்து ஆதி 2 எனும் இரண்டாம் பகுதி சமீபத்தில் சிங்கப்பூரில் வெளியீடு கண்டது.

இக்கதையின் படி சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆதி பற்றியும் அவரது விபரங்களையும் அறியும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆதியை நேரில் பார்த்து விவாதிக்க விரும்புகின்றனர். ஆதி 10000 வருடங்களாக வாழ்ந்து வருபவர் என்பதை ஏற்றுக்கொள்ளாத மாணவர் கண்ணனுக்கும், சலீம், யாழினி ஆகியோருக்கும் இடைப்பட்ட தொடர் விவாதங்கள் அதன்பின் ஆதி என்னவாகிறார் என்பது தான் இரண்டாம் பாகத்தின் கதை. வழக்கமான குறும்படமாக இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தில் பயணிப்பது தான் இக்குறும்படத்தின் சிறப்பம்சம். கிட்டத்தட்ட ஒரு மணிநேர குறும்படமானது தொய்வில்லாமல் நமது வரலாற்றுத் தகவல்களோடு பயணிக்க வைத்ததற்கு ஆதி 2 படத்தின் இயக்குநரைப் பாராட்டியே ஆக வேண்டும். வெகுசில கதாபாத்திரங்கள், நான்கு சுவர்களுக்குள் நகரும் திரைக்கதை மிகப்பெரும் பலமாகவும் பலவீனமாகவும் இருப்பது பார்ப்பவர்களின் ரசனையைப் பொறுத்து மாறுபட்டுப் போகும் வாய்ப்பை எளிதாக வழங்குகிறது. ஆதி பற்றிய விவாதங்களில் ராஜராஜன் கால நினைவுகள் காட்சிகளில் சற்றே தொய்வை ஏற்படுத்தினாலும் கண்ணனின் அதிரடிக் காட்சிகள் சற்றே நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. தொடர் விவாதக் காட்சிகளில் காமெடியாய் சலீம் சில வசனங்களால் கிச்சு கிச்சு காட்ட முயற்சித்தாலும் நகைச்சுவை அவ்வளவாகப் பொருந்தவில்லை.

தொழில்நுட்ப ரீதியாக ஆதி படத்தின் முதல் பகுதியை விட மேம்பட்டு இருக்கிறது எனக்கூறும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது இன்னுமொரு சிறப்பு. ‘ஆத்மா ராமா’ பாடலும் மனதை வருடம் வகையிலும், படம் முடிந்த பின்னும் நம்முள் இருப்பது படத்தின் முக்கிய அங்கம். வித்தியாக கதைக்களத்தில், ஏராளமான வரலாற்று தகவல்களை மையமாகக் கொண்டு ஒரு மணி நேர திரைப்படம் முயற்சியில் வெற்றியை எட்டிப் பிடித்திருக்கும் ஆதி 2 குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

Aadhi 2 Crew :

Written & directed by : Aravindh C

Cinematography : Vinod Chakravarthi

Music: Ashwath

Editing : Vignesh D War

Associate Camera: PB Raj Cast: Hariharan, Rithumitha, Haja Mohideen, Viswanath, Abrahaam Nithya Pandian, Ramesh, Suruthi

Produced by : Vijay Sangarramu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here