ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் – சிட்டி சென்டர்

0
399

185 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் (Australian Museum – City Center)1827 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நிறுவப்பட்டது. ஆஸ்திரேலியாவின் முதல் அருங்காட்சியகம் என்ற பெருமையும் இந்த அருங்காட்சியகத்துக்கு உள்ளது. 185 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞான ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் முன்னணியில் இந்த அருங்காட்சியகம் உள்ளது.

இங்கு, கண்காட்சிகள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பசிபிக் பெருங்கடலில் காணப்படும் தாவரங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய பல அரிய
தகவல்கள் நிரம்பி வழிவதால், பார்வையாளர்களின் வருகை எப்போதுமே குறையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளது.

18 மில்லியனுக்கும் அதிகமான பொருட்களை உள்ளடக்கிய கலாச்சார மற்றும் இயற்கை வரலாற்றின் தொகுப்பைக் கொண்டுள்ளது இந்த அருங்காட்சியகம். ஆஸ்திரேலிய அருங்காட்சியக ஆராய்ச்சி மையம் (AMRI) மூலம் புதுமையான அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டு நமது பூமியில் உள்ள 400 அற்புதமான மற்றும் வேறுபட்ட விலங்குகளின் தொகுப்பு கொண்ட நிரந்தர கண்காட்சி அரங்கும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இந்த உலகத்தை ஆராய்வதற்கும், புரிந்துகொள்வதற்கும் மற்றும் கவனிப்பதற்கும் பல விசயங்கள் மற்றும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், மரத்தின் மரபில் இருந்து உயிரினங்கள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி கண்டன என்பது குறித்தும் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்தால் அறிந்து கொள்ளலாம்.

முகவரி: 1 William Street (Opp. Hyde Park)
Sydney NSW 2010

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here