பர்மா புத்தர் கோயில்

0
340

பர்மா புத்தர் கோயில் என்றும் மஹா சாசன ராம்சி என்றும் அழைக்கப்படும் இந்த புத்தர் கோயில் சிங்கப்பூரில் 1875-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிங்கப்பூரில் வாழும் பர்மியர்கள் வழிபடும் ஒரே கோயிலாக இந்த பர்மா புத்தர் கோயில் உள்ளது. இங்கு தேரவாத பெளத்த பள்ளியும் இயங்கி வருகின்றது. தேரவாதம் என்பது பெளத்தத்தில் மிகவும் பழமையான பிரிவு. பெரும்பான்மையாக மரபுவழி பெளத்தத்துக்கு ஓரளவு சமமாக இருக்கிறது. இலங்கையில் வாழும் 70 சதவீதம் பேர் இச்சமயத்தையே வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தலாய்லாமா போன்ற மதக்குருக்கள் இந்த பிரிவினை சேர்ந்தவர்களே. பர்மா புத்தர் கோயிலில் இயங்கி வரும் இந்த தேரவாத பள்ளியில் புத்த துறவிகள் தங்கி தங்களுக்கான பெளத்த கல்வியை முறையே கற்று வருகின்றனர்.

1875-ஆம் ஆண்டில் பர்மாவில் இருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த மக்களில் ஒருவரான யு தார் இனின் என்பவர் இக்கோயிலை கிண்டா சாலையில் உருவாக்கினார். தாங் சோயே சின் என்றும் அவரை பலரும் அழைத்து வந்தனர். புத்த கோயிலும் அதில் உள்ள பெரிய வெள்ளை மார்பிளிலான புத்தர் சிலையும் இந்தக் கோயிலின் சிறம்பம்சம். 1875-ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வந்த இக்கோயில், தாய் கின் சாலையில் உள்ள நோவேனா என்ற தற்போது கோயில் இருக்கும் இடத்துக்கு 1988-ஆம் ஆண்டு இடம் மாற்றப்பட்டது.

இந்தக் கோயிலின் வெளிப்புற வளாகத்தில் போதி மரம் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் அடியிலும் புத்தரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றனர். போதி மரத்தடியில் தான் சகாயமுனி புத்தருக்கு ஞானோதயம் கிடைத்ததை நினைவூட்டவே இப்படி செய்துள்ளனர்.

பர்மா புத்தர் கோயிலில், புத்தாண்டு தினம், சீன புத்தாண்டு, தண்ணீர் திருவிழா, வேசாக் தினம், வசா(மழை) தினம் மற்றும் கதீனா போன்ற சிறப்பு தினங்கள் முக்கிய வழிபாட்டு தினங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும், வாரந்தோறும் தர்மா மற்றும் அபிதம்மா வகுப்புகளும் பூஜைகளும் இங்கு முறையாக நடத்தப்பட்டு வருகின்றன.

சீனர்களின் பாரம்பரியம் மற்றும் பர்மியர்களின் பாரம்பரியம் ஆகிய இரண்டினையும் சிங்கப்பூரில் உள்ள இந்த பர்மா புத்த கோயில் நமக்கு கற்றுத் தரும் ஒரு தலமாக திகழ்கிறது.

Address: 14 Tai Gin Road, Singapore 327873

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here