கதீட்ரல் மேய்ப்பன் ஆலயம்

0
309

சிங்கப்பூரின் மிகவும் பழமை வாய்ந்த ரோமன் கத்தோலிக தேவாலயம் இந்த நல்ல மேய்ப்பன் கதீட்ரல் தேவாலயம். குயின், விக்டோரியா தெருக்கள் மற்றும் பிராஸ் பாஷா சாலையின் அருகே அமைந்துள்ளது இந்த தேவாலயம்.

ஆரம்ப காலக் கட்டத்தில் சிங்கப்பூரில் கிறித்துவ மதம் டெனிஸ் லெஸ்லி மெக் ஸ்வேனி என்பவரின் இல்லத்தில் வழிபடப்பட்டது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் அங்கு வந்த ஆங்கிலேயர்கள் வழிபட ஒரு தேவாலயம் தேவைப்பட்டதால், 1832-ஆம் ஆண்டு சேப்பல் எனும் பெயரில், ஒரு சிறிய மரக் குடிலாக தேவாலயம் 1833-ஆம் ஆண்டு 60 அடி உயரத்தில், 30 அடி அகலத்தில் 700 ஸ்பானிஷ் டாலர்கள் செலவில் கட்டப்பட்டது. பின்னர் பல்வேறு கட்ட மாறுதல்களுக்கு பிறகு, ஜூன் 6, 1847-ஆம் ஆண்டு 18,355 ஸ்பானிஷ் டாலர்கள் செலவில் தற்போது உள்ள தேவாலயம் கட்டப்பட்டு இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள தேவாலயம் லண்டனில் உள்ள புகழ் பெற்ற தேவாலயங்கள் ஆன புனித பால் கோவெண்ட் பூங்கா தேவாலயம் மற்றும் புனித மார்டின் தேவாலயத்தின் கட்டமைப்பை ஒத்துள்ளதாக கருத்துகள் வெளியாகியுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது இந்த தேவாலயம் மருத்துவமனையாக செயல்பட்டு பல பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளது. ஜூன் 28, 1973-ஆம் ஆண்டு இந்த தேவாலயம் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னமாக அரசு கோப்புகளில் இடம் பிடித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மதங்களை கடந்து இதனை ஒரு நினைவுச் சின்னமாகவும் பார்வையிட்டு வருவது இந்த தேவாலயத்தின் தனிச் சிறப்பு.

Address: A Queen St., Singapore 188533.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here