சிங்கப்பூரில் தடம் பதிக்கும் கலர்ஸ் டிவி தமிழ்

0
275

சிங்கப்பூர் உள்ள தமிழர்களின் பொழுதுபோக்கு அம்சமான தொலைக்காட்சி தேவைகளுக்கு மீடியாகார்ப் வசந்தம், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பிரதானமான சேனல்கள் நிகழ்ச்சிகள் வழங்கி வருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்களை அதிகம் கவர்வது தொடர் நாடகங்களும் ரியாலிட்டி ஷோக்களும் தான். புதிதாக களமிறங்கும் ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டித் தன்மைக்கு ஏற்ப புதுமையான கதையுடன் நுட்பங்களுடன் நிகழ்ச்சியைப் படைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அவ்வகையில் தமிழில் ஆரம்பிக்கப்பட்ட கலர்ஸ் டிவி புதுமையான கதையம்சங்களுடன் கொண்ட தொடர் நாடகங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

வழக்கமான தொடர்நாடகங்கள் போலல்லாமல் வித்தியாசமான கதையமைப்பில், வெளிப்புற இடங்களை மையமாகக் கொண்ட தொடர்நாடகங்கள் தயாரிப்பிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட நாடகங்களாலும் தமிழ் மக்கள் மனதில் கலர்ஸ் டிவி இடம் பிடித்துள்ளது என்பதை குறிப்பிட்ட சேனலின் உயர் இயக்குநரான அனுப் சந்திரசேகரன் உயர்ரக கேமெராக்கள் கொண்டு தாயாரிப்பதையும் பெருமைபடக் கூறினார். கலர்ஸ் டிவியின் சிங்கப்பூர் பங்காளரான அப்போலோ செல்லப்பாஸ் உரிமையாளர் சங்கர், வழக்கமான நிகழ்ச்சிகளில் இருந்து கலர்ஸ் டிவியின் நிகழ்ச்சிகள் புத்மையாக இருந்ததும் வீடியோக்களின் தரமும் மிகவும் கவர்ந்ததாலேயே கலர்ஸ் டிவியின் பங்காளராக முன்வர காரணம் என தெரிவித்தார். கலர்ஸ் டிவியின் பிரதான நாடகத் தொடர்களான பேரழகி, திருமணம், தறி, சிவகாமி, ஓவியா, மலர், மைனா ஆகியவற்றின் முன்னோட்டமும் ரியாலிட்டி ஷோக்களான சிங்கிங் ஸ்டார்ஸ், டான்ஸ் Vs டான்ஸ் ஆகிய நிகழ்ச்சிகள் பற்றியும் நடிகர், நடிகைகள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


ராதிகா சரத்குமார் நெறியாளராக இருந்து பெண்களை மட்டுமே வைத்து நடத்தப்படும் கோடீஸ்வரி நிகழ்ச்சி பற்றியும் அறிவிக்கப்பட்டது. கலர்ஸ் டிவியின் தொகுப்பாளர்கள் விஜய், கிகி கலகலப்பாக தொகுத்து வழங்கினார்கள். கலர்ஸ் டிவியின் ஆரம்பான நாளான அன்றே 6 விளம்பரதாரர்கள் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. புதிதாக களமிறங்கியுள்ள இப்புதிய வர்த்தகத்தில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த சங்கர் ஹோல்டிங் நிறுவத்தின் உரிமையாளர் சங்கர் தொடர்ந்து ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here