எஸ்பிளனாடே அரங்கம்

0
245


சிங்கப்பூரின் நதிக்கரையின் வாய்ப்புற பகுதியில் அமைந்துள்ளது இந்த அழகிய பிரம்மாண்டம். 6 ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த எஸ்பிளானடே அரங்கத்தில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சிகள், கலை விழாக்கள் அரங்கேறும். வட்ட வடிவிலான இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் உள்ள இசை அரங்கத்தில் 1,600 பேர் அமரக்கூடிய இருக்கைகளும், அதன் அருகில் 2,000 இருக்கைகள் கொண்ட பரந்த திரையரங்கும் உள்ளன. 2002ல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் மொத்த அழகையும் அருகில் இருக்கும் வானுயர்ந்த கட்டிடங்களின் வழியே காணலாம். இதன் தன்னிகரற்ற கட்டிட வடிவமைப்பை மேலிருந்து பார்த்தால் வெப்பமண்டல பகுதியில் விளையும் துரிய பழத்தைப் போல காட்சியளிக்குமாம். இதன் மேற்புறக் கூரையில் அமைக்கப்பட்டுள்ள அலுமினிய தடுப்பான்கள் சூரிய ஒளியை அரங்கத்திற்குள் நுழைய விடா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த மைக்கேல் வில்ஃபோர்ட் மற்றும் அமெரிக்காவின் ருஸல் ஜான்சன் ஆகிய இரு கட்டிடக் கலை மேதைகள் இணைந்து இதனை உருவாக்கினர். எஸ்பிளானடேவில் உள்ள இரு அரங்கங்களுக்கும் நுழைய மைய பகுதியில் அதன் வாயில் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு. எஸ்பிளானடே திறக்கப்பட்ட கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை 35,000 நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளது. 2.5 கோடி விருந்தினர்கள் இதனை பார்வையிட்டுள்ளனர். மாபெரும் இசை நிகழ்ச்சி, பாப் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி, ஹாலிவுட் படங்களின் புரோமஷன்ஸ் போன்ற கலை சார்ந்த பல நிகழ்ச்சிகள் தினமும் இங்கு அரங்கேறிய வண்ணம் இருக்கும். தற்போது என்ன நிகழ்ச்சி நடக்கின்றது. அதில், கலந்துக் கொள்ளவதற்கான டிக்கெட் பெற, உங்களுடைய கலை நிகழ்ச்சிக்கு அரங்கு முன்பதிவு செய்ய www.esplanade.com மின் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

Phone: +65 6828 8377
Address: 1 Esplanade Drive, Singapore 038981.

கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு தெற்கு தடங்களை இணைக்கும் சிட்டி ஹால் மார்ட் நிலையத்திலிருந்து ஸ்டேட்மபோர்ட சாலை வழியாக 800 மீட்டர் தூரம் நடந்தால் இங்கு வர முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here