ஈரோ ஏசியன் பாரம்பரிய மையம்

0
483

ஈரோ ஏசியன் என அழைக்கப்படும் ஐரோப்ப மற்றும் ஆசிரியர்களின் கலப்பின மக்களும் சிங்கப்பூரில் மிக பழங்காலம் தொட்டே வாழ்ந்து வருகின்றனர். எண்ணிக்கையில் சிறிதளவு இருந்தாலும் அவர்களது பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை இன்னமும் பேணிகாத்து வருகின்றனர். மேற்கில் இருந்து கடல்வழி பயணமாக கிழக்கை நோக்கி வந்த மேற்கத்தியர்கள் ஆசிய மக்களுடன் கலந்து ஈரோ ஏசியன்களாக மாறினர். இந்த இனத்தைச் சார்ந்தவர்கள், மலாக்கா, பெனாங், கோவா, மக்கா மற்றும் இலங்கையில் இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் உள்ள ஈரோ ஏசியன் பாரம்பரிய மையம் அவர்களது நீண்ட நெடிய வரலற்றினை இங்கு வரும் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தெளிவாக விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 3 அரங்குகளில் எங்கிருந்து எந்த வழியாக முதன் முதலில் அவர்கள் வந்தனர். இரண்டாம் உலக்ப்போரில் அவர்களது பங்கு எத்தகையது போன்றவை கண்காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், போர்த்துகீசியர்களின் கிராமிய நடனத்தை கற்றுக் கொடுக்கும் பிரத்யேக நடன அரங்கு ஒன்றும் இங்கு உள்ளது. ஐரோப்பா கண்டத்திலிருந்து இங்கு சுற்றுலா வரும் பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் இந்த நடனத்தை பயில்கின்றனர்.

நீங்களும் சிங்கப்பூரின் இந்த பாரம்பரிய மையத்துக்கு வந்தால், ‘ஜிங்கிலி நோனா’ எனும் கிராமிய பாடலை இசைக்கும்படி கேட்டு சும்மா ஒரு நடனத்தை போடலாம்!

இங்குள்ள உணவகத்தில் ஈரோ ஏசிய மக்களின் பாரம்பரிய உணவு வகைகள் சுற்றுல பயணிகளுக்கு திருப்தியான விருந்தினை உண்ட மன் நிறைவை அளிக்கும். செம்மோலினா மற்றும் பாதாம் கலந்து தயாரிக்கப்பட்ட டெவில் கறி மற்றும் சூகி கேக்குகள் இங்கு மிகவும் பிரபலம்.

பார்வை நேரம்:

செவ்வாய் முதல் ஞாயிறு,

காலை 9 முதல் மாலை 6 மணி வரை.

திங்கள் விடுமுறை.

Address: 139 Ceylon Road, Singapore 429744

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here