ஃபேபர் மலை!

0
323

சிங்கப்பூரின் மத்திய பகுதியில் உள்ள புகித் மேரா டவுனில் உள்ளது ஃபேபர் மலை(Mount Faber). 344 அடி உயரம் கொண்ட இந்த மலை சுற்றுலா பயணிகளுக்கு இயற்கையின் பேரழகை ரசிக்க வைக்க உதவுகிறது. ஃபேபர் மலை சாலை, மராங் சாலை ஆகிய வழிகள் இந்த மலைக்கு செல்ல வழிவகுக்கிறது. இதன் அருகாமையில் தெலாக் ப்லங்கா மலை பூங்கா, கென்ட் ரிட்ஜ் பூங்கா மற்றும் ஹேண்டர்சன் அலை பாதை ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன. மலையின் பனோரமா பார்வை அழகின் எல்லைகளை நம் கண்முன்னே நிறுத்தும் தன்மைக் கொண்டது. சிங்கப்பூரின் கேபிள் கார் முறை இந்த மலையை துறைமுகம் மற்றும் செந்தோசா தீவு ஆகிய பகுதிகளில் இருந்து இணைக்கின்றது.

ஃபேபர் மலை தெலாக் பிலாங்கா என முன்னர் அழைக்கப்பட்டது. ஆனால், 1844-ஆம் ஆண்டு அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த பொறியாளர் சார்லஸ் எட்வர்ட் ஃபேபரின் கட்டுமானத் திறனால், இந்த மலைக்கு ஃபேபர் மலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலையில் 1845-ஆம் ஆண்டு சிக்னல் நிலையம் ஒன்று கட்டப்பட்டது. 1857-ஆம் ஆண்டு இந்த மலையில் ஒரு கோட்டை எழுப்ப திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அந்த கோட்டை கட்டும் கனவு நிறைவேற்றப்படவில்லை. மலையின் மேல் சுற்றுலா பயணிகளுக்கான உணவகங்கள் மற்றும் பூங்காக்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும், மலையின் அழகை ரசித்துச் செல்ல பல லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர்.

Address: Telok Blangah Rd, Singapore 099448

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here