கேனிங் கோட்டை:

0
446

கேனிங் கோட்டை, மலை உச்சியில் இருக்கும் இந்த கோட்டை சிங்கப்பூரின் பல வரலாற்று நினைவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. 18 ஹெக்டர்கள் கொண்ட இந்த அழகிய கோட்டை 1822ம் ஆண்டு கட்டப்பட்டது. 14ம் நூற்றாண்டில் மலாய் அரசரின் அரண்மனையாகவும் இந்த கோட்டை விளங்கியது. இரண்டாம் உலகப்போரின் போது 1942ல் ஜப்பானியர்களிடம் சிங்கப்பூர் சரணடைந்த வரலாற்று சிறப்புமிக்க இடமும் இதுதான். இந்த கோட்டையின் அடியில் தான் போர் பெட்டி எனும் ரகசிய இடமும் உள்ளது. தற்போது இந்த கோட்டையில் பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளும், பிரம்மாண்ட கலை விழாக்களும், பெரிய திருமணங்களும் நடைபெறுகின்றன. வரலாற்றில் ஆர்வம் மிகுந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த கேனிங் கோட்டை சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும். ஃபிளாக் ஸ்டாஃப் லான், பசுமை கேனிங் கோட்டை, கோட்டை வாயில்கள், திருமணமான ராணுவத்தினர் உறைவிடங்கள், சுற்றுலா கூரை, ராஃபில் இல்லம், கேலரி நிலா, கேலரி உத்தமா, கேனிங் கோட்டை புல்வெளி போன்ற இடங்களை முன்பதிவு செய்துக் கொண்டு மக்கள் பயன்படுத்து வருகின்றனர்.

Address: River Valley Rd, Singapore 179037

போர் பெட்டி

இரண்டாம் உலகப் போரின் போது, சிங்கப்பூரின் கட்டளை மையமாக இருந்து செயல்பட்டது இந்த போர் பெட்டி. கேனிங் மலைக் கோட்டையின் அடியில் ரகசியமாக கட்டப்பட்டு இருந்தது இந்த போர் பெட்டி. தற்போது இது இரண்டாம் உலகப் போரின் நினைவுகளை சுமந்து நிற்கும் நினைவுச்சின்னமாகவும், அருங்காட்சியகமாகவும் திகழ்கிறது. இந்த போர் பெட்டியை பற்றி சிங்கப்பூர் மக்களிடம் இரு கதைகள் உலவி வருகின்றன. இரண்டாம் உலகப்போரின் போது மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் வீழ்ச்சியையும், கேனிங் மலைக் கோட்டையின் 700 ஆண்டு கால வரலாற்று சிறப்பினையும் கூறுகின்றனர். சிங்கப்பூர் தீவின் மத்திய பகுதியில் இருக்கும் சின்ன மலையில் தான் கேனிங் கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஸ்டாம்ஃபோர்ட் ராஃப்பில்ஸ் என்பவர் 1823ம் ஆண்டு கட்டிய தங்கும் இடம் தான் போர் பெட்டியாக பின்னாளில் செயல்பட்டது. ஜப்பானியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நடந்த கோர யுத்தத்தின் விழுமியங்கள் இன்றும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் தனது சோகக் கதையை சொல்லி அழும்.

கட்டண விபரம்:
பெரியர்வர்கள் – 18 சி.டாலர்கள்.
குழந்தைகள்(7-12வயது) 9 சி.டாலர்கள்.

Address: 2 Cox Terrace, Fort Canning Park, Singapore 179622
Phone: +65 6338 6133

வட்டப்பாதை , வடகிழக்கு , வடக்கு தெற்கு இரயில் தடங்களை இணைக்கும் டொபி காட் இரயில் நிலத்தில் இருந்து ஓர்ச்சார்ட் ரோடு வழியாக நடந்தால் 300 மீட்டர் நடக்கும் தொலைவில் இந்த கோட்டை உள்ளது.

Note: கேனிங் கோட்டை Fort Canning:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here