ஃபுக் தக் சி அருங்காட்சியகம்

0
461

சிங்கப்பூரில் தற்போது அருங்காட்சியகமாக உள்ள ஃபுக் தக் சி அருங்காட்சியகம் (Fuk Tak Chi Museum), உண்மையில் சிங்கப்பூரில் அமைந்த பழமையான சீனக் கோயிலாகும். சைனாடவுனில் வாழ்ந்த சீனர்களால் 1824-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சீனர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டு சிறப்புடன் கலை பொக்கிஷமாக திகழ்கிறது இந்த அருங்காட்சியகம்.

கன்ஃபூசியஸ் மற்றும் தவோயிசக் கொள்கைகளை மதமாக வழிபடும் சீன மக்கள் 1819-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தனர். கன்டோனிஸ் மற்றும் ஹக்கா எனும் அகதிகள் இருவர், இந்த சிறிய ஆலயத்தை துவா பெக் காங் எனும் சீனக் கடவுளை வழிபட 1820 – 1824-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கட்டினர். இந்தக் கோயில், சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு மக்கள் பத்திரமாக வந்து சேர்ந்ததற்காக சீன மக்கள் தங்கள் நன்றி பிராத்தனையைத் தெரிவிக்கும் இடமாக அப்போது விளங்கியது.

மரத்தால் ஆன கோயிலாக இருந்த இதனை அங்கு வந்து வழிபட துவங்கிய மக்களின் நன்கொடைகளை பெற்று 1825-ஆம் ஆண்டு செங்கல் கட்டிடக் கோயிலாக புனரமைப்பு செய்தனர். பின்னர் பல கட்ட விரிவாக்கம் மற்றும் மாறுதல்கள் அடைந்த இக்கோயில், 1869-ஆம் ஆண்டு ஹோக்கியன் சமூகத் தலைவர் சியங் ஹோங்க் லிம் என்பவரின் பராமரிப்பில் பரிபூரண கோயிலாக உருமாறியது.

காலப்போக்கில் பராமரிக்க ஆள் இல்லாததால் இந்தக் கோயில் 1990-களில் முழுமையாக அழிவு நிலைக்குச் சென்ற அவலம் நேர்ந்தது. அதன் பின்னர் சிங்கப்பூர் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 1998-ஆம் ஆண்டு இதனை ஃபுக் தக் சி அருங்காட்சியமாக மாற்றினர். உருவில் சிறியதாக இருந்தாலும், இங்கு வந்து பார்வையிடுவோர் மனங்கள் அமைதியடைவதாகவும் கோயிலின் நேர்மறை ஆற்றல் இன்னமும் இங்கு இருப்பதாக உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி சுற்றுல பயணிகளும் நம்புகின்றனர்.

Address: 76 Telok Ayer Street, Singapore 048464

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here