தங்க முனை விருது 2019 – போட்டி அறிவிப்பு

0
464

தேசிய கலைகள் மன்றம் ஆண்டு தோறும் அளித்து வரும் தங்கமுனை விருதுக்கான போட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1993ம் ஆண்டு முதல் இயங்கி வரும் தேசிய கலைகள் மன்றம் நடத்தும் படைப்புகளுக்கான போட்டியானது சிங்கப்பூரில் புதிய எழுத்தாளர்களை அடையாளம் காணவும், தொடர்ந்து இலக்கிய படைப்புகளில் எழுதும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் தங்கமுனை விருது கொடுக்கப்பட்டு வருகிறது. தங்க முனை விருது போட்டிக்கான படைப்புகளை வரும் ஜூலை 1 முதல் 31 வரை இணையம் வழி அனுப்பலாம். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க முனை விருது இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் விருது விழாவில் வழங்கப்படும்.

தங்கமுனை விருதுக்கு படைக்கப்படும் படைப்புகள் சொந்தமானதாகவும், வேறெந்த இணைய/ அச்சுப் பிரதிகளில் வெளிவராததகவும் இருத்தல் அவசியம். சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளான மலாய், சீனம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இந்த போட்டியானது நடைபெறுகிறது. சிறுகதை மற்றும் கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இந்த போட்டியில் முதல் பரிசு வெல்லும் வெற்றியாளருக்கு 4,000 வெள்ளி பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும். இரண்டாம் பரிசு பெறுபவருக்கு 3000 வெள்ளிகளும் சான்றிதழும் வழங்கப்படும். கடைசி மற்றும் மூன்றாம் பரிசை வெல்லும் நபருக்கு 2000 வெள்ளிகளும் சான்றிதழும் விருது மேடையில் வழங்கப்படும்.

மேலும், சிறப்பு பரிசுகளாக அடுத்த மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா 500 வெள்ளிகள் பரிசாக வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் National Arts Council (NAC) எனப்படும் தேசிய கலை மன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், போட்டியில் பங்குபெற விரும்புவர் 16 வெள்ளிகள் (ஜிஎஸ்டி உள்பட) கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும். மேலும், விபரங்களுக்கு NAC_Literary_Arts@nac.gov.sg. என்ற மின்னஞ்சலிலும் அதன் இணைய தளத்தினையும் nac.gov.sg. தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here