பசுமை கூரை நான்யாங் பல்கலைக்கழகம்

0
241


அற்புதமான பல கட்டிடக் கலைகளுக்கு சொந்தமான நகரமாக விளங்குகிறது சிங்கப்பூர். நான்யாங் தொழில் நுட்ப பல்கலைக் கழகம் அதற்கு ஒரு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு. அந்த அழகிய பல்கலைக் கழக கட்டிடத்தின் மேற் கூரை பசுமையான புல்வெளி அமைப்பாய் வடிவமைக்கப்பட்டு இயற்கையும், தொழில் நுட்பமும் ஒன்றாக சங்கமிக்கும் அற்புத காட்சியை நமக்கு விருந்தளிக்கும். மேல்தள கூரை பச்சை பசும் புல்வெளியாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், சூரிய வெப்பம் இதனை தாக்காது. மேலும், மழை நீர் சேகரிப்பு தொழில் நுட்ப முறையையும் இந்த பல்கலைக் கழகம் கையாண்டு வருகிறது. இங்கு கலை, வடிவமைப்பு மற்றும் ஊடகம் சம்பந்தப்பட்ட கல்வி பயில்விக்கப்படுகிறது. பசுமை போர்த்த கூரையின் அழகிய கொடையின் கீழ் மாணவர்கள் கல்வி கற்பது என்பது இயற்கையோடு அவர்கள் இணைந்து வாழும் உணர்வை தரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இதுபோன்ற பசுமை கட்டிடங்கள் தான் இனி உலகின் தேவை என்பதையும் இந்த கட்டிடம் உணர்த்தத் தவறியதில்லை. சிங்கப்பூரின் காண வேண்டிய இடங்களில் இந்த 5 மாடிக் கட்டிடமும் முக்கியமான ஒன்றுதான்.

கிழக்கு மேற்கு தடத்தில் உள்ள பூன்லே இன்டெர் சாஞ்சு – ல் இருந்து பேருந்து என் 179- ல் ஏறி 10 நிறுத்தங்கள் கழித்து பிளாக் எண் 41 -ற்கு எதிப்புறமுள்ள நிறுத்தத்தில் இறங்கி 36 மீட்டர் நடக்கும்  தூரத்தில்  இந்த இடம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here