Home Guest Writers

Guest Writers

Tam Shanmugam
தாம் சண்முகம் - சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் துணைத் தலைவராக ( Vice President) பணியாற்றி வருகிறார். கவிமாலை, பேச்சாளர் மன்றம், தமிழ் நிகழ்ச்சிகள் பற்றிய தனது பார்வைகள் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர் தமிழ் மொழிப் பண்பாட்டு கழகம் சார்பில் வெளிவரும் ‘தமிழ் மணி’ இதழின் பொறுப்பாசிரியாராகவும் இருக்கிறார்.
A.P Raman
சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளரான திரு ஏ.பி. இராமன் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வசித்து வருபவர். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த சிற்றிதழ்கள் ஆசிரியரகப் பணியாற்றியவர் நாடகம், சிறுகதை, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். சிங்கப்பூர் நிகழ்வுகள், உலக நிகழ்வுகளை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிந்து வருபவர்.
தமிழகத்தின் பிரபலாமான நகைச்சுவை எழுத்தாளரான கீழை அ. கதிர்வேல் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பது சிறப்பம்சம். சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் சிங்கப்பூர் தமிழ் நிகழ்ச்சிகளில் தவறாமல் வலம் வருவதும் புன்னகையுடன் வரவேற்கும் பண்பும் இவரது சிறப்பம்சம். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம், தங்கமீன், கவிமாலை ஆகிய அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள், போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொள்ளும் சிறப்பான எழுத்தாளர்.
Vijay Sangarramu
சிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.
Kumar MK
சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் துணைத் தலைவராக இருக்கும் எம்.கே.குமார் கவிஞர், எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர். சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக இருக்கும் இவர் சிராங்கூன் டைம்ஸ் இதழின் இணையாசிரியராகவும் இருக்கிறார். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் வழங்கிய கண்ணதாசன் விருதை 2017 ல் பெற்றவர்.
Fareej Mohamed
சிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தொழில் தீர்வு மேலாளராக பணிபுரிபவர் மற்றும் தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் தமிழர் வாழ்வியல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருபவர்.