ஹாவ் பார் வில்லா

0
567

சிங்கப்பூரின் பசிர் பஞ்சங் சாலையில் அமைந்துள்ளது ஹவ் பர் வில்லா கேளிக்கை பூங்கா. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளும் நூற்றம்பதுக்கும் மேற்பட்ட டையோரமாஸ் எனப்படும் சீன புராண கதைகளின் சிறிய வடிவ பொம்மைகள் இந்த கேளிக்கை பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு சீனாவின் வரலாற்றை எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது.

1937-ஆம் ஆண்டு 3.2 ஹெக்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த கேளிக்கை பூங்கா ஆரம்பத்தில் டைகர் பாம் தோட்டம் என்றே அழைக்கப்பட்டது. டைகர் பாம் தைலம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தினர் தான் இந்த பூங்காவை ஆரம்பத்தில் உருவாக்கினர். டைகர் பாம் நிறுவனத்தை உருவாக்கிய சீன சகோதரர்களான அவ் பூன் ஹவ் மற்றும் அவ் பூன் பர் ஆகியோர் பர்மாவில் இருந்து தங்களது வர்த்தகத்தை விரிவுப்படுத்த 1926- ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தனர். 1935-ஆம் ஆண்டு இந்த இடத்தை வாங்கி 1937-ஆம் ஆண்டு டைகர் பாம் தோட்டத்தை உருவாக்கினர். பின்னர் 1986-ஆம் ஆண்டு சர்வதேச கேளிக்கை பூங்கா நிறுவனம், 30 மில்லியன் டாலர்கள் செலவில் இதனை கேளிக்கை பூங்காவாக மாற்றினர்.

1988-ஆம் ஆண்டில் தான் சிங்கப்பூரின் சுற்றுலா மையத்தினால் டைகர் பாம் தோட்டத்தின் பெயர் ஹவ் பர் வில்லா டிராகன் உலகம் என மாற்றப்பட்டு அதுவே ஹவ் பர் கேளிக்கை பூங்காவாக வழங்கப்பட்டு வருகிறது. நரகத்தின் பத்து நீதிமன்றம், இந்த கேளிக்கை பூங்காவின் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான ஒரு இடமாகும். சீனாவின் புராதன கதைகளில் வரும் நரகங்களை பற்றிய வடிவமைப்பு சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை தூண்டும் ஒன்றாக இன்றளவும் இருந்து வருகிறது. ஹவ் சகோதரர்களுக்கு நினைவுச் சின்னமும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. சிரிக்கும் புத்தர், மேற்கை நோக்கி ஒரு பயணம், வெள்ளை நாகம் மற்றும் 12 சீன ஜோதிட சிலைகள் உட்பட பல அரிய விஷயங்கள் இங்கு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

Address: 262 Pasir Panjang Road, Singapore 118628.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here