ஹெண்டர்சன் அலை பாலம்(Henderson Waves Bridge)

0
272


சிங்கப்பூரின் ஹெண்டர்சன் சாலையில் உள்ளது இந்த பிரம்மாண்ட ஹெண்டர்சன் அலை பாலம். 36மீட்டர் உயரம் கொண்ட இந்த பாலம், ஃபேபர் மலை பூங்காவையும் தெலோக் பிலங்கா பூங்காவையும் இணைக்கும் பாலமாக உள்ளது. கடல் அலைகளை போன்ற அழகிய அமைப்புடன் காட்சியளிக்கும் இந்த பிரம்மாண்ட கட்டிடக் கலை 274மீட்டர் தூரத்தையும் 8மீட்டர் அகலத்தையும் கொண்டுள்ளது. பாதாசாரிகள் நடந்து செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலம், மஞ்சள் பலாவு மரங்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 9 கி.மீ., உள்ள இந்த நடைபாதை பாலம் சுற்றுலா பயணிகளுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும், செல்ஃபி பிரியர்களுக்கும் உகந்த இடம். இந்த பாலத்தில் நடந்தவாறே கீழே உள்ள பூங்காவில் இருக்கும் பறவைகளையும், அழகிய தோட்டங்களையும் கண்டு கழிக்கலாம். தினமும் இரவு 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை எல்.இ.டி மின் விளக்குகளால் விதவிதமான வண்ணத்தில் காட்சியளிக்கும் இந்த ஹெண்டர்சன் அலை பாலம்.

Address: Henderson Road, Mount Faber Park, Singapore 099203.

வட்டப்பாதையில் உள்ள லாப்ரடார் பார்க் இரயில் நிலையத்திலிருந்து வெளியேறி ஆப்டர் அலெக்ஸாண்ட்ரா ரோடு நிறுத்தத்தில் இருந்து பேருந்து 176-ல் இருந்து நான்கு நிறுத்தங்கள் கழித்து ஆப்டர் டேழு ப்ளான்ஹா ஹெயிட்ஸ் நிறுத்தத்தில் இறங்கி 500 மீட்டர் நடக்கும்  தொலைவில் ஆரம்பிக்கிறது இந்த பாலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here