ஹோங் லிம் பூங்கா ( பொதுக்கூட்ட மன்றம்)

0
307


சிஙகப்பூரில் உள்ள பாரம்பரியமிக்க 2.3 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்காவாக ஹோங் லிம் பூங்கா திகழ்கிறது. கிளார்க்கீ மற்றும் சைனா டவுன் ரயில் நிலையங்கள் அமைந்துள்ள நியூ ஃபிரிட்ஜ் சாலையில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது ஹொக்கின் தொழிலதிபரான சியாங் ஹோங் லிம் என்பவரால் 1885ல் உருவாக்கப்பட்டதால் அவரின் பெயராலேயே ஹோங் லிம் பூங்கா என அழைக்கப்படுகிறது. 1950 முதல் 1960 வரையான காலகட்டங்களில் நடந்த எண்ணற்ற தேர்தல் பேரணிகளுக்கும், அரசியல் மேடைப் பேச்சிற்கும் முக்க்கியமான தளமாகப் பயன்படுத்தப்பட்ட இந்தப் பூங்கா சிங்கப்பூருக்கான முதல் பொதுமக்கள் பூங்காவாகும். சிங்கப்பூர் அரசு இந்த பூங்காவினை பேச்சுக்கான மன்றமாக செப்டம்பர் 2000 ல் அறிவித்தது, அதன் மூலம் இந்தப் பூங்காவில் அனுமதியின் பேரில் அரசியல் கட்சிகளும், பொதுநல நிறுவனங்களும், சமுதாயக் கூடங்களும் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள், உண்ணாவிரதம் இருப்பதற்கான இடமாகவும் பயன்படுத்திக் கொள்கின்றன.

பொதுக்கூட்ட நிகழ்வுக்கான அனுமதி பெற இங்கே சுட்டவும்.

வடகிழக்கு மற்றும் டோவ்ன் டவுன் தடங்களை இணைக்கும் சைனாடவுன் இரயில் நிலையத்தில் இருந்து நியூ பிரிட்ஜ் ரோடு வழியாக 400 மீட்டர் நடக்கும் தொலைவில் இந்த பூங்காவை சென்றடைய முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here