இஸ்தானா – ஜனாதிபதி இல்லம்

0
500

சிங்கப்பூரின் ஜனாதிபதி வசிக்கும் அதிகாரப்பூர்வ வசிப்பிடம் தான் இஸ்தானா. இதற்கு மலாய் மொழியில் அரண்மனை என்ற அர்த்தம். சிங்கப்பூருக்கு வரும் விருந்தினர்கள் ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், அந்நாட்டு பிரதமரின் அலுவலகமாகவும் இஸ்தானா செயல்படுவது கூடுதல் சிறப்பு. 106 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் 1867 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை சாதிக்காய் பயிரிடப்பட்டு இருந்த மலைத் தோட்டமாக விளங்கியது. பின்னர் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் இந்த இடத்தில் இஸ்தானா என்ற அரண்மனையை ஆங்கிலேய கவர்னர் வசிப்பதற்காக கட்டினர். சுதந்திரம் பெற்ற 1959ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் அலுவலகமாக இந்த அரண்மனை விளங்கியது. 1867 மற்றும் 1869ம் ஆண்டு காலக் கட்டத்தில் சிங்கப்பூரில் காலணி ஆதிக்கத்தை நடத்திய முதல் கவர்னர் சார் ஹேரி புனித ஜார்ஜ் அவர்களின் ஆணைக்கிணங்க உருவாக்கப்பட்டது. ஜான் ஃப்ரெட்ரிக் மற்றும் அடல்பஸ் மெக் நாயர் எனும் கட்டிடக் கலைஞர்கள் பல்லாடியன் கட்டிடக் கலை தொழில்நுட்பத்துடன் இந்த அழகிய அரண்மனையை கட்டினர்.

இஸ்தானா முதன்மை கட்டிடம் மற்றும் இயற்கை அழகு போன்ற இடங்களை கண்டு ரசிக்கலாம். மேலும், சிங்கப்பூரை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகியோரின் தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும்.

பொதுமக்களின் பார்வைக்காக ஆண்டின் சில முக்கிய தினங்களில் ஜனாதிபதி அலுவலகம் திறக்கப்படும். 2017ம் ஆண்டில் திறக்கப்படும் நாட்கள்,

சீன புத்தாண்டு – 29 ஜனவரி 2017(ஞாயிறு)
உழைப்பாளர் தினம் – மே 1 (திங்கள்)
ஹரி ராய புசா – 25 ஜூன்(ஞாயிறு)
தேசிய தினம் – 30 ஜூலை (ஞாயிறு)
தீபாவளி – 18 அக்டோபர் (புதன்கிழமை)

கட்டணம்:

பெரியவர்கள் – சி.$4
சிறியவர்கள் – சி.$2

பார்வை நேரம்:

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை

செய்யக்கூடாதவை:

கத்தி, முள் கரண்டி உட்பட கூர்மையான ஆயுதங்கள் அனுமதி இல்லை.
புகை, மது கூடாது.
தீப்பற்றக் கூடிய பொருட்கள் அனுமதி இல்லை.
தரவுகளை இறக்கும் பென் டிரைவ் போன்ற கருவிகள் அனுமதி இல்லை.

Address: Orchard Road, Singapore 238823

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here