கம்போங் கிளாம் மசூதி

0
521

சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய மசூதி இந்த கம்போங் கிளாம் மசூதி. 1928-ஆம் ஆண்டு கம்போங் எனும் இடத்தில் கட்டப்பட்ட சுல்தான் மசூதி, அதன் எழில் மிக்க அழகால் கம்போங்கின் பேரழகு என்று வர்ணிக்கப்பட்டு அதுவே பிற்காலத்தில் அதன் பெயராகவும் மாறிவிட்டது. கிளாம் என்றால், ஆங்கில Glamourous-ன் சுருக்கம். அதோனுடு இணைந்திருந்த இஸ்தானா கம்போங் கிளாம், காலப்போக்கில் மலாய் பாரம்பரிய பூங்காவாய் அது உருமாறியது.

இந்த முஸ்லிம் மசூதியின் அருகே உள்ள வீதியும் அழகிய கடைகள் மற்றும் உணவகங்கள் கொண்ட முழு பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாதலமாக மாறி பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்து வருகின்றது. ரமலான் மாதத்தின் மாலை பொழுதில் இந்த இடம் இஸ்லாமிய நண்பர்கள் மொத்தமாக குழுமி, விதவிதமான உணவுகளை வேட்டையாடும் வண்ணமயமான நிகழ்வுகளால் இந்த வீதியே திருவிழாக் கோலம் பூண்டுவிடும். இங்கு உள்ள உணவகங்களில் அரேபியாவில் பிரபலமான நாசி படாங் எனும் அரிசியுடன் பலவகை உணவுக் கலவைகள் கொண்ட அற்புதமான உணவு கிடைக்கும், மேலும், மலாய் கேக்குகளும் இங்கு பிரபலம். இதன் அருகில் உள்ள கடைகளில், வாசனை திரவியங்களும், கெபாயா எனும் ஆடை வகைகளும் பெருமளவில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Address: 3 Muscat Street, Singapore 198833

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here