கதைக்களம் ஆகஸ்ட் மாத சந்திப்பு

0
501

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக நற்பணி செயற்குழுவும் இணைந்து மாதம் தோறும் நடத்தும் கதைக்களம் நிகழ்வு 06/08/2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை பெக்கியோ சமூக மன்றத்தில் நடைபெற்றது. வழக்கம் போல இந்த மாதமும் கதைக்களம் நிகழ்ச்சியை அதன் பொறுப்பாளரும் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் துணை செயலாளருமான திருமதி கிருத்திகா அவர்கள் வழி நடத்தினார். முதல் அங்கமாக தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளில் ஒன்றும் கதை விமர்சனம் ஒன்றும் மாணவர் சிறுகதை ஒன்றும் வாசிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாணவர் பிரிவில் காவ்யா தானே எழுதிய கதையை ஏற்ற இறக்கங்களுடன் சொல்ல கதையில் எல்லோரும் மயங்கினர்.கதை சொல்வது என்ற சிறந்த கலையை நமக்கு நினைவூட்டினார். சிறந்த கதை எழுதி வாசித்த ரிஜூதாவும் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து கதைகள் மற்றும் கதை விமர்சனங்கள் குறித்த உரையாடல் இடம்பெற்றது.திருமதி மலையரசி அவர்கள் வழி நடத்தும் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் தொடரில் இந்த மாதம் எழுத்தாளர் ஜே.எம்.சாலி அவர்களின் படைப்புகளை கவிஞர் கோ இளங்கோவன் அவர்கள் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.முதன்முதலாக சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கிய விருதில் தொடங்கி சிங்கப்பூரின் ஆகப் பெரிய விருதான கலாச்சார விருது வரை அனைத்தையும் பட்டியலிட்டு விபரமாக பேசியவர் திரு ஜே.எம்.சாலி அவர்கள் தொட்டு எழுதாத துறையே இல்லை என்றவர் சிங்கப்பூர் நூலகத்தின் எந்த ஒரு பிரிவிலும் திரு ஜே எம் அவர்களின் நூல்களை நாம் காணலாம் என்று குறிப்பிட்டார்.குழந்தைகளுக்காகவும் பெரியவர்களும் அவர் எழுதிய நூல்களை பட்டியலிட்டு சொன்னதுடன் எழுத்தாளர் கலாச்சார விருது பெற்றபோது எடுத்த வீடியோ படத்தையும் திரையிட்டது சிறப்பு வந்திருந்தோர் அனைவரும் நம் சமகால எழுத்தாளரான திரு ஜே எம் சாலி அவர்களைப்பற்றி புரிந்துகொள்ள ஒரு சிறந்த அறிமுகமாக அது இருந்தது.

தொடர்ந்து எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் அவர்கள் சிறப்புரையாற்ற கனடாவில் இருந்து வருகை தந்திருந்த இணைப்பேராசிரியர் சேரன் அவர்களின் சிறப்புக்களை கூறி அவைக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன் தொடர்ந்து நடக்கவுள்ள எழுத்தாளர் கழக நிகழ்ச்சிகள் குறித்தும் அறிவிப்புகளைத் தந்தார்.சிறப்புரையாற்ற கனடாவில் இருந்து வருகை தந்திருந்த திரு சேரன் அவர்களின் பேச்சில் தமிழுக்கு கனடா அரசாங்கம் தந்துள்ள முக்கியத்துவத்தை குறிப்பிட்டவர்.நம் தமிழ்க் குடும்பங்களில் தமிழில் எழுதுவோரை எப்படி நடத்துகின்றோம் என்பதை தனது ரயில் பயணத்தின்போது நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றினை குறிப்பிட்டு பேசியது அவையோரை சிரிக்க வைத்தத்துடன் சிந்திக்கவும் வைத்தது.தமிழின் சிறப்புகள் குறித்து முனைவர் ஏற்கெனவே நமக்கு தெரிந்த ஆனால் நாம் மறந்த ஒன்றை கூறியது சிறப்பானதாகும் . உலகின் எல்லா மொழிகளும் ஏதோ ஒரு மதம் அல்லது இனத்துக்கு சொந்தமானதாக இருக்கும் போது.பல் வேறு மதங்களுக்கும் இனங்களுக்கும் சொந்தமாக தமிழ் இருக்கின்றது என்பதே அது.தமிழர்கள்களின் உழைப்புதான் உலகின் முன்னேறிய பல நாடுகளுக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியது பயனுள்ளதாக இருந்தது.இறுதியில் முனைவர் சேரன் அவர்களுடன் வாசகர்களின் கலந்துரையாடலும் இடம் பெற்றது.
சிறப்புரையாற்றிய முனைவர் சேரன் அவர்களுக்கு எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகப் பரிசு வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு முனைவர் சேரன் பரிசுகளை வழங்கினார்.போட்டிச் சிறுகதைகளை முகநூல் மற்றும் புலனத்தில் சிறப்பாக விமர்சனம் செய்த திரு ஜெயக்குமார் அவர்களுக்கு திரு கீழை அ.கதிர்வேல் புத்தகப் பரிசினை வழங்கினார்.

நிகழ்ச்சி சரியாக 3 மணிக்கு ஆரம்பித்து 5 மணிக்கு நிறைவு பெற்றது இம்மாத வெற்றியாளர்கள்.

சிறுகதை விமர்சனம்
முதல் பரிசு

திருமதி பிரேமா மகாலிங்கம் எழுதிய ‘கடகம் ‘ குறித்த விமர்சனம் எழுதிய திருமதி சித்ரா தணிகைவேல்
இரண்டாம் பரிசு

திருமதி அழகுநிலா எழுதிய ‘பொழுதின் தனிமை’குறித்த விமர்சனம் எழுதிய திருமதி இந்துமதி

சிறுகதை
முதல் பரிசு: திருமதி இந்துமதி ‘சின்ன அணைப்பு’
இரண்டாம் பரிசு: திரு சியாம்குமார் ‘ஆண்டவன் கணக்கு’
மூன்றாம் பரிசு : திருமதி சித்ரா தணிகைவேல் ‘விரதம் ‘

மாணவர் பிரிவு சிறுகதை:
முதல் பரிசு’அம்மா’ ரிஜூடா
இரண்டாம் பரிசு: ‘தெய்வங்களே இப்படித்தான் ‘ ரிதிஷ்
மூன்றாம் பரிசு : ஹரிணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here