கவிமாலை 211 – அறிமுகமாகும் நூல் பரிமாற்றும் அங்கம்

0
330

ஏ.பி. ராமன் :


வழக்கம்போல் மாத இறுதி சனியான 30.09.2017 – இன்று மாலை சரியாக 7.06 மணிக்கு ஜலான் புசார் சமூக மன்றத்தின் பின்புறமுள்ள பிளாக் 804 ல் கவிஞர் பாலமுருகன் நெறியாளராக இருந்து தொடங்கினார்.
படித்த பிடித்த வடித்த கவிதைகளைக் கவிஞர்கள் பகிர்ந்துகொண்டனர். இன்றைய நிகழ்வுக்கு முன்னிலை வகித்தவர் சிங். இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் . இன்று முதல் கவிமாலை ஒரு புதிய முறையைக் கவிஞர் ப்ரியா முன்னின்று தொடங்கி வைத்தார். அதாவது வாசிப்பை ஊக்குவிக்கும் நல் நோக்கத்தில் ஏற்கனவே அறிவித்தபடி கவிஞர்கள் நூல்லளைக் கொண்டுவந்திருதிருந்திருந்தனர். மற்றவர்கள் எடுத்துச் சென்று படித்துவிட்டு மறுமாதம் கொண்டுவந்து கொடுக்கலாம். இப்படி நூல் பரிமாற்றம் செய்யும் திட்டம் வரவேற்கிறோம். போட்டிக் கவிதை விவாதம் எனும் புதிய அங்கத்திற்குக் கவிஞர் சி. கருணாகரசு பொறுப்பேற்று முன்மொழிந்தார். போட்டிக்கு வந்த கவிதைகளில் மூன்று கவிதைகளை திரையிட்டதோடு படித்தும் காண்பித்தார். இன்று வருகை புரிந்த கவிஞர்களின் கவிதையையே தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. வருகை தந்தோர் பங்கெடுத்துத் தங்களின் விமர்சனங்களை அவையில் வெளிப்படையாக வைத்தனர்.அது கவிதையை மேம்படுத்த உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

அடுத்து தலைவர் கவிஞர் இறை மதியழகன் புதிய பல புதிய அறிவிப்புகளுடன் தலைமையுரை ஆற்றினார்.
மாத்தியோசி குழுவினர் பல புதிய அங்கங்களை அமல்படுத்த முன் வைத்ததில் சிலவற்றை எடுத்துக்கொண்டதாக அறிவித்தார்.
அடுத்து கவிஞர் கி. கோவிந்தராசு பொறுப்பேற்று உள்ளூர் கவிதை நூலை விமர்சித்தார். அதாவது கதவு திறந்தது எனும் கவிமாலையின் தொகுப்பு நூலின் சிறப்புகளையும் கவிஞர்களின் எழுத்துகளை நகைச்சுவையுடன் விளக்கினார்.
அடுத்த அங்கமாக மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்கத்தில் கவிஞர் இன்பா முன்னின்று நடத்தினார். மாணவன் துரை குமரனும் மாணவி குழலியும் உரையாற்றியது பெருமையாக இருந்தது. அடுத்தத் தலைமுறைக்குத் தமிழைக் கொண்டுபோகும் திட்டம் வரவேற்கத்தகுந்தது. அவர்களின் கவியுலகில் நுழைந்த நினைவுகளைப் பகிர்ந்ததோடு தம் கவிதைகளையும் படித்தார்கள். குழலியின் இயற்கையான பேச்சு எல்லோரையும் கவர்ந்திருந்தன.
அடுத்து பிறமொழிக் கவிஞர் ஒருவரை அறிமுகப்படுத்தும் அங்கமாக இன்று கவிஞர் இறை மதியழகன் லெபனான் நாட்டுக் கவிஞர் கலீல் இப்ரான் பற்றிய வரலாறு சொல்ல வந்த மதி, கலீல் ஓர் இஸ்லாமியர் அல்லர் என்றும் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர் எனும் செய்தி புதிதாகவும் வியப்பாகவும் இருந்தது. ஆங்கிலக் கவிதைகளைத்தான் எழுதியுள்ளார் என்றார்.
இறுதியாகப் போட்டிக் கவிதைகளைக் கவிஞர்கள் வாசித்தனர்.

பரிசு பெற்ற கவிஞர்கள்:
முதற்பரிசு :தங்கமணி
சிறந்த மரபுக் கவிதைப் பரிசு:ந. வீ. விசயபாரதி
இரண்டாவது பரிசுகள் மூவர்:கி. கோவிந்தராசு, கருணாகரசு, சத்தி கண்ணன்
மூன்றாம் பரிசுகள் மூவர்:தியாகராசன், பாலமுருகன், லலிதா சுந்தர்
பரிசுகளை திருவாளர்கள் க து மு இக்பால், மா. அன்பழகன், முனைவர் இரத்தின வேங்டேசன் ஆகியோர்
கரங்களால் கொடுக்கப்பட்டது.
நிகழ்ச்சி சரியாக 9. 20க்கு நிறைவடைந்தது. பின்னர் இரவு உணவு இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here