கென்ட் ரிட்ஜ் பூங்கா

0
535

சிங்கப்பூரின் கென்ட் ரிட்ஜ் பகுதியில் உள்ள 47 ஹெக்டேர் நிலப்பரப்புக் கொண்ட பொது பூங்கா தான் கென்ட் ரிட்ஜ் பூங்கா (Kent Ridge Park). சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் மற்றும் சிங்கப்பூர் அறிவியல் பூங்கா ஆகிய இரு பெரும் முக்கிய இடத்திற்கு மத்தியில் இந்த பூங்கா அமைந்துள்ளது சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வரப்பிரசாதம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பறவைகள் மற்றும் அழகிய சுற்றுச் சூழலை பார்வையிட முடியும்.

இத்தனை அமைதியான இடமாக திகழும் இந்த பூங்கா இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானிய படையை எதிர்த்து மலேசிய படையினர் கடுமையான போர் புரிந்த இடம் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. 1942-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 முதல் 14-ஆம் தேதி வரை பசீர் பஞ்சங் என்ற வரலாற்று போர் இங்கு நடந்தது.

1954-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட இந்த பூங்கா, 1995-ஆம் ஆண்டில் தான் சிங்கப்பூரின் அரசு கோப்புகளில் இரண்டாம் உலகப் போரின் நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. சிங்கப்பூரில் மொத்தம் 11 இடங்கள் உலகப் போரின் வடுக்களை சுமந்து நிற்கும் இடங்களாக அரசால் அங்கீகரிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பூங்காவில் ஆங்கிலேய ராணுவ தளபதி ஒருவரின் பங்களா உள்ளது. பின்னர் அது புகித் சந்து எனும் இரண்டாம் உலக் போரின் நினைவிடமாக மாறி இன்றளவும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாம் உலகப் போரை விளக்கும் அருங்காட்சியமாகவும் திகழ்கிறது. இந்த பூங்காவில் பைக் ஓட்டுவதற்கான மலை பாதை, இயற்கையாக அமையப்பெற்ற குளம், அதில் இருக்கும் அழகிய மீன்கள் மற்றும் ஆமைகள், மேலும், பல வித இயற்கை பாடங்களை சொல்லித்தரும் மரங்களும் இங்கு ஏராளம்.

Address: Vigilante Dr, Singapore 118176

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here