கென்யா தமிழ்ப் பண்பாட்டு மன்றம்

0
221
கென்யா தமிழ்ப் பண்பாட்டு மன்றம், கென்யா நாட்டின் தலைநகரமான நைரோபியில் கடந்த 14 வருடங்களாக மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.கென்யாவில் ஏறத்தாழ 400 தமிழ்க் குடும்பங்கள் இருக்கின்றன. மத வேறுபாடின்றி இந்து ஆலயங்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், இஸ்லாமிய மசூதிகள் அனைத்தும் இங்கு ஏராளமாக உள்ளன.
தமிழ் மன்றத்தின் கமிட்டி உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு நமது கலாச்சார மற்றும் சமூக நிகழ்ச்சிகளை தமிழ் மணம் மாறாமல் நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், காரியதரிசி பாலா பாஸ்கரன், துணை மற்றும் இணை காரியதரிசிகள் ஷேக், காந்தி, சகோதரிகள் திருமதி. மீனாட்சி ரமேஷ், திருமதி. கிரிஜா வெற்றி மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவர்களும் மிக சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here