கொங் மெங் சன் போர் கார்க் மடாலயம்

0
449

சிங்கப்பூரில் இந்து மதக் கோயில்களுக்கு இணையாக புத்த மதக் கோயில்களும், சீனத் துறவிகளின் மடாலயங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. சிங்கப்பூரின் பிரைட் ஹில் சாலையில் (Bright Hill Road) கொங் மெங் சான் போர் கார்க் (Kong Meng San Phor Kark See Monastery)எனும் துறவியின் மடாலயம் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய புத்த மதக் கோயிலாக இந்த மடாலயம் பார்க்கப்படுகிறது.

இந்த கோயிலை 20-ஆம் நூற்றாண்டில் ஜூவான் தாவோ உருவாக்கினார். 1920 மற்றும் 1921-ஆம் ஆண்டுகளில் தாம்சன் சாலையில் உள்ள நிலம் தாய் வூ செங் எனும் சீன தொழிலதிபரால் நன்கொடையாக கொடுக்கப்பட்டு போர் கார்க் சீ மடாலயம் கட்டப்பட்டது. பின்னர் 1947-ஆம் ஆண்டு ஹோங் சூன் எனும் துறவியின் கட்டுப்பாட்டில் இந்த மடாலயம் பராமறிக்கப்பட்டு இதன் கட்டுமான பணிகள் விரிவுபடுத்தப்பட்டன. 10 கால்பந்தாட்ட மைதான அளவுக்கு மிகப்பெரிய தியான அரங்குகளும், 10,000 புத்த விகாரங்களும் கோயில் முழுதும் பரவி இந்த கோயிலை பிரம்மாண்டமான கோயிலாக மாற்றின. சுற்றுலா பயணிகளுக்கு இந்த கோயில் கட்டட கலை மற்றும் புத்த மத வரலாறு மற்றும் அவர்களின் பண்பாடுகள் குறித்து மிகவும் அறியும் வகையில் இந்த கோயில் பிரமிப்பாக அமைந்துள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தர் இந்தக் கோயிலில் தான் உள்ளார். 13.8 மீட்டர் உயரமும் 55 டன் எடையும் கொண்ட வெண்கலத்தினால் ஆன புத்தர் அமைதியின் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறார். இதன் அருகாமையில் 2014-ஆம் ஆண்டு 4 அடுக்குகள் கொண்ட கார் பார்க்கிங் கட்டமைப்பு கட்டப்பட்டது. மேலும், 6 அடுக்கு மாடி கொண்ட புத்த கல்லூரியும் இந்த கோயிலுக்கு அருகாமையில் புத்த மத துறவிகளின் கல்விக்காக கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

Address: 88 Bright Hill Rd, Singapore 574117

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here