குவான் இம் தொங் ஹுட் சோ கோயில்

0
529

சிங்கப்பூரின் வாட்டர்லூ பகுதியில் உள்ள சீனக் கோயில் இந்த குவான் இம் தொங் ஹூட் சோ கோயில்(Kwan Im Thong Hood Cho Temple). சிங்கப்பூரில் வாழும் சீன மக்களின் வழிபாட்டுத் தலமாக இந்த கோயில் திகழ்கிறது. இங்குள்ள குவான் இன் கடவுளை வழிபடுவதன் மூலம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், இக்கோயில், பல தொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான சேவைகளையும் அப்பகுதி மக்களுக்கு இந்த கோயில் வழங்கி வருகிறது.

1884-ஆம் கட்டப்பட்ட இந்தக் கோயில் எந்த இடமாற்றமும் செய்யப்படாமல் இன்றளவும் அதே பகுதியில் வழிபாட்டுத் தலமாக திகழ்கிறது. 1895-ஆம் ஆண்டு கோயிலின் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றது. சீனக் கட்டிடக் கலை அமைப்பில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. அதில் ஜென் மதத்தை தோற்றுவித்த இந்தியாவில் இருந்து சீன சென்ற போதி தர்மருக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் ஹுவா துவா எனும் மருத்துவ துறவிக்கும் சகாயமுனி புத்தருக்கு மூன்றாம் இடமும் ஒதுக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றது.

குவான் இம் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடும் அளவிற்கு சிங்கப்பூரிலே இது மிகவும் பிரபலமடைந்த கோயில். இங்கு வந்து வழிபட்டால் தங்களுக்கு சகல செளபாக்கியங்களும் கிடைத்துவிட்டதாக சிங்கப்பூர் மக்கள் உணர்வதே இந்தக் கோயிலின் தனி சிறப்பு.

சீன புத்தாண்டை தொடர்ந்து முதல் 15 நாட்களுக்கு இந்த கோயில் திருவிழா போல காட்சியளிக்கும். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் இங்கு வந்து பிரார்த்தனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த நேரத்தில் கோயிலின் தெரு முழுவதும் மிகப்பெரிய கூட்டம் காணப்படும்.

1997-ஆம் ஆண்டு முதல் தொண்டு மற்றும் சேவை பணிகளில் இக்கோயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. சிமெயில் சிறுநீரக மாற்று மையம் இக்கோயில் நிர்வாகத்தால் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. மேலும், கல்வி மற்றும் மருத்துவ துறையில் பல சேவைகளை செய்து வருகிறது இந்த சீனக் கோயில்.

Address: 178 Waterloo St, Singapore 187964

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here