லொயாங் துவா பெக் காங் விநாயகர் கோயில்

0
218

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள லொயாங் வழி தடத்தில் அமைந்துள்ளது லொயாங் துவா பெக் காங் கோயில். 1980-ஆம் ஆண்டு உருவான இக்கோயிலில் பல மத வழிபாடுகள் நிறைந்துள்ளது. இந்து, முஸ்லிம், பெளத்தம், தாவோயிசம் உள்ளிட்ட மதங்களின் கடவுள்கள் ஒரே குடையின் கீழ் இந்தக் கோயிலில் ஒற்றுமையோடு அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்குள்ள விநாயகர் சன்னதியில், சிவன், லட்சுமி ஆகிய இந்து மத தெய்வங்களும் உள்ளன. 1980-களில் இந்த பகுதியில் இருந்த மீனவ நண்பர்களான பால் தான் மற்றும் ஹுவாங் ஜோங் திங் ஆகிய இருவரும் தங்களுடைய நண்பர்கள் குழுவை ஒன்றிணைத்து அங்கு வழிபட்டு வந்த பல மத வழிபாட்டுக்கு ஒரு ஆலயம் எழுப்ப திட்டமிட்டு லொயாங் தொழிற்பேட்டைக்கு அருகே குடிசைக் கோயிலாக இதனை எழுப்பினர். 1996-ஆம் ஆண்டில் அங்கு ஏற்பட்ட தீவிபத்தில் கோயிலின் கூரை சாம்பலானது. பின்னர், 2003-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதன் அருகாமையில் இருந்த 20 லொயாங் பாதை இடத்திற்கு குடிபெயர்ந்தது. 12மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் செலவில் புதிய கோயில் அழகாக கட்டப்பட்டது. இந்தக் கோயில் 2மீட்டர் உயர கணபடி சிலை நிறுவப்பட்டுள்ளது. மாதம் சுமார் 20,000 பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர். விநாயகர் கோயிலுக்கு வருவது போன்று மத்த மத நண்பர்களும் எவ்வித தயக்கமும் இன்றி புத்தம் மற்றும் இஸ்லாம் கடவுள்களையும் வழிபட்டுச் செல்வர். மேலும், இந்தக் கோயிலில் அனைத்து மதங்களின் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும்  நடைபெறும். சுற்றுலா பயணிகளுக்கு ஒற்றுமையின் பாடத்தையும், பல மத கொள்கைகளையும் அரிய இது பெரிதும் உதவுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here