மேக்ரிச்சி நீர்தேக்கம்:

0
406

சிங்கப்பூரின் மிக பழமைவாய்ந்த நீர்த்தேக்கம் என்றால் அது மேக்ரிச்சி நீர்த்தேக்கம் தான். 1868ம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. பசுமையையும், இயற்கையையும் விரும்புவர்களுக்கு இந்த இடம் நிச்சயம் ஒரு சொர்க பூமி என்றே சொல்லலாம். இதன் இயற்கை வளங்களும், பசுமை பொழியும் எழிலும் சுற்றுலா பயணிகளை மெய்மறக்கச் செய்யும் திறன் பெற்றது. 12 ஹெக்டர் பரப்பளவில் விஸ்தாரமாய் காட்சியளிக்கும் இந்த நீர்த்தேக்கத்தில், பல நாட்டு பறவைகளும், குரங்குகள், பல வகை மீன்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் சக்திக் கொண்டவை. இங்கு சுற்றுலா பயணிகள் மீன்களை பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இங்குள்ள குரங்குகளுக்கு உணவு கொடுப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை பொழுதுகளில் காலாற நடப்பதற்கும், ஜாகிங் செய்வதற்கும் உகந்த ஒரு இயற்கை ஓடுதளமாக இந்த நீர்த்தேக்கம் காட்சியளிக்கிறது.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் நாடு கடக்கும்(cross-country) போட்டிகளை இந்த நீர்த்தேக்கத்தில் நடத்துவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான ஓய்வறைகள், உணவகங்கள், குளியல் அறைகள், பாதுகாப்பு லாக்கர்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மஷ்ரூம் கஃபே, சிங்கப்பூர் படகு கூட்டமைப்பு, வாவா பிஸ்ட்ரோ போன்ற வணிக இடங்களும் இங்கே உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விதவிதமான பறவைகளை கண்டு ரசிக்கலம். அருகே உள்ள உடற்பயிற்சி பகுதியில், யோகா போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். படகு சவாரிகளும் அதற்கான பயிற்சி பள்ளிகளும் இங்கு உள்ளன. இதனை ஒட்டியுள்ள காட்டிற்குள் 3.2கி.மீ., வரை டிரெக்கிங் போகலாம். இரண்டு அடுக்குகள் கொண்ட கார் பார்க்கிங் வசதி கொண்ட கட்டிடத்தில் சுமார் 300 கார்கள் வரை பார்க் செய்யும் வசதி இங்குள்ளது. இந்த மேக்ரிச்சி நீர்த்தேக்கத்தைக் காண கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.

நேரம்: காலை 7 முதல் இரவு 7 மணி வரை.

Address: MacRitchie Reservoir Park, Singapore298717, Singapore

வட்டப்பாதையில் உள்ள காலடிகட்ட் அல்லது மேரி மவுண்ட்  இரயில் நிலையத்தில் இறங்கி வாடகை கார் மூலம் லொரண்யே சாலையில் பயணித்தால் 6 நிமிடத்தில் இங்கு சென்றடைய முடியும்.

Note: மேக்ரிச்சி நீர்தேக்கம் MacRitchie Reservoir:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here