மலாய் பாரம்பரிய மையம்( Malay Heritage Center)

0
329

சிங்கப்பூரின் நிச்சயம் சுற்றிப் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களில் மலாய் பாரம்பரிய மையமும் ஒன்று. இதனை பார்வையிடுவதன் மூலம், சிங்கப்பூரில் வசிக்கும் மலாய மக்களின் பாரம்பரியங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் தெளிவாக புரியும். 160 ஆண்டுகளுக்கு முன்னர் சுல்தான் அலியால் கட்டப்பட்ட அரண்மனை தற்போது மலாய் பாரம்பரிய மையமாக உருமாறி உள்ளது. சுல்தான் ஹுசைன் ஷாவின் மகன் தான் இந்த அரண்மனையைக் கட்டிய சுல்தான் அலி. இதற்கு இஸ்தானா காம்போங் கிலாம் என்ற பெயரை சூட்டியிருந்தார். சிங்கப்பூரில் முகமதியரின் ஆட்சிக் காலத்தில் இந்த அரண்மனை முகலாய கட்டிடக் கலை முறைப்படி கட்டப்பட்டது. பின்னர் இந்த 86,000 சதுர அடி பரப்பளவு ஜூலை 28, 1999-ஆம் ஆண்டு மலாய் பாரம்பரிய மையமாக மாற்றப்பட்டது. பல கட்ட பணிகளுக்குப் பின்னர் நவம்பர் 27, 2004-ஆம் ஆண்டு தான் பொதுமக்கள் பார்வையிடும் தலமாக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

இந்த பாரம்பரிய மையத்தில் ஜெலம் மரங்கள் காணப்படுகின்றன, மேலும், இந்தோனேசியாவைச் சேர்ந்த பூகிஸ் இன மக்களின் பழக்கவழக்கங்கள், நாகரிகங்கள் மற்றும் மலேசிய மக்களின் உணவு, பண்பாடு, உடை, அணிகலன்கள் போன்ற அனைத்து விதமான பாரம்பரிய நினைவுகளைத் தன்னகத்தே தாங்கி சுற்றுலா பயணிகளுக்கு மலாய் பாரம்பரியத்தை போதிக்கும் போதிமரமாக நின்றுக் கொண்டிருக்கின்றது இந்த மலாய் பாரம்பரிய மையம். ஆரம்பத்தில் மக்களின் அன்பளிப்பு மற்றும் ஊக்கத்தொகைகளை பெற்று நடந்து வந்த இந்த மையம், பின்னர் 2008-ஆம் ஆண்டு, சிங்கப்பூர் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் நுழைந்தது. ஆண்டுக்கு 1.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர் தொகையை பராமரிப்பு மற்றும் இதர செலவு பணிகளுக்காக வழங்கி வருகிறது. இங்கு சொற்பொழிவுகள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறைகள் அவ்வப்போது நடப்பது வழக்கம். 2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளிப்புற கட்டட பணிகளுக்காக சிறிது காலம் மூடப்பட்ட இந்த மையம் பின்னர், செப்டம்பர் 1, 2012-ஆம் மீண்டும் பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது. பூகிஸ் எம்.ஆர்.டி ஸ்டேஷனில் இருந்து இங்கு வர பேருந்து மற்றும் வாகன வசதிகள் உள்ளன.

பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.

Address: 85 Sultan Gate, Singapore 198501.

டவுன் டவுன் மற்றும் கிழக்கு மேற்கு இரயில் தடங்களை இணைக்கும் பூகிஸ் இன்டெர்ச்சஞ்சு -ல் இருந்து 700 மீட்டர் நடக்கும் தூரத்தில் இது அமைந்துள்ளது. மேலும் அதிக விபரங்களுக்கு இந்த இணைப்பை பயன்படுத்தவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here